U19 உலகக்கோப்பை! இந்தியா - இங்கிலாந்து இன்று பலப்பரீட்சை
19-வயதுக்குட்பட்டோருக்கான உலககோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்திய இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
19-வயதுக்குட்பட்டோருக்கான ஜூனியர் உலககோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது.
16 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில், லீக் சுற்று, காலிறுதி மற்றும் அரையிறுதி போட்டிகளின் முடிவில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
ஏற்கனவே 4 முறை கோப்பையை வென்றுள்ள இந்திய அணி 5-வது முறையாக பட்டம் வெல்லவும், 2வது முறையாக பட்டம் வெல்ல இங்கிலாந்து அணியும் மல்லுக்கட்டுவதால் இந்த போட்டி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இறுதிப்போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, முதலில் பேட்டிங் செய்து வருகிறது.