ஜூனியர் உலகக்கோப்பை தொடர் : 4வது முறையாக இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதி
ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதிப் பெற்று அசத்தியுள்ளது.
வெஸ்ட் இண்டீஸில் 19 வயதுக்கு உட்பட்ட 14வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது.இதில் ஆன்டிகுவாவில் நேற்று நடைபெற்ற இரண்டாவது அரை இறுதிப்போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதின.
இப்போடியில் டாஸ் ஜெயித்த இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணியில் கேப்டன் யாஷ் துல் 110 ரன்களும், ஷேக் ரஷித் 94 ரன்களும் விளாச 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 290 ரன்கள் குவித்தது.
இதனை தொடர்ந்து 291 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக லச்லான் ஷா மட்டும் அரைசதம் அடிக்க 41.5 ஓவர்களில் 194 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதன்மூலம் இந்திய அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 4வது முறையாக இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.