ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: அரையிறுதியில் மோதும் இந்தியா - ஆஸ்திரேலியா
ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்டில் நாளை நடைபெற உள்ள 2வது அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
வெஸ்ட் இண்டீஸில் 19 வயதுக்கு உட்பட்ட 14வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது.இதில் ஆன்டிகுவாவில் நாளை நடைபெறும் இரண்டாவது அரை இறுதிப்போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
நடப்பு தொடரில் சிறப்பான பார்மில் உள்ள இந்திய அணி தோல்வியே சந்திக்காமல் உள்ளது. அதேசமயம் ஆஸ்திரேலிய அணி இலங்கைக்கு எதிரான போட்டியில் தோல்வியை தழுவியது.
4 முறை சாம்பியனான இந்திய அணியும், ஆஸ்திரேலிய அணியும் சமபலம் வாய்ந்ததாக இருப்பதால் இந்த போட்டி பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடரின் போது சில இந்திய வீரர்கள் கொரானா பாதிப்புக்குள்ளான நிலையில், தற்போது அனைத்து வீரர்களும் முழு உடற்தகுதியுடன் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்போட்டி இந்திய நேரப்படி நாளை மாலை 6.30 மணிக்கு நடைபெற உள்ளது.ஏற்கனவே இரு அணிகளும் மோதிய பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.