மைதானத்தில் போட்டியின் போது ஏற்பட்ட நிலநடுக்கம்! பதறிப்போன வீரர்கள்
U19 உலகக்கோப்பை போட்டியின் போது திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு தொற்றிக்கொண்டது.
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட்ப் போட்டி தொடர் west indies நாட்டில் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த தொடரானது தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது. இதில் அடுத்து நடக்கவுள்ள அரையிறுதி போட்டிகளில் india மற்றும் australia அணிகள் மோதுகின்றன. மற்றொரு போட்டியில் england மற்றும் afghanistan அணிகள் மோதவுள்ளன.
Earthquake at Queen's Park Oval during U19 World Cup match between @cricketireland and @ZimCricketv! Ground shook for approximately 20 seconds during sixth over of play. @CricketBadge and @NikUttam just roll with it like a duck to water! pic.twitter.com/kiWCzhewro
— Peter Della Penna (@PeterDellaPenna) January 29, 2022
இந்நிலையில், தொடரிலிருந்து வெளியேறிய அணிகளுக்கு இடையிலான தரவரிசையை நிர்ணயிக்க போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.இப்போட்டியில் tirintat இல் உள்ள Queens Park ஸ்டேடியத்தில் zimbabwe மற்றும் ayarland அணிகள் மோதின.
இந்த போட்டியில் zimbabwe அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து ஆடிக்கொண்டிருந்தது. அப்போது ஆட்டத்தின் நடுவே 11-வது ஓவரில் வீரர்கள் விளையாடி கொண்டிருந்த போது திடீரென camera க்கள் ஆடியது.
இதனை பார்த்த ரசிகர்களுக்கு என்ன நடக்கிறது என்று ஒன்றுமே புரியவில்லை. அப்போது கிரிக்கெட் வர்ணனையில் ஈடுபட்டு இருந்த ஆண்டிரூ லேனார்ட் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அப்போது பேசிய அவர், ‘நிலநடுக்கத்துக்கு நடுவில் நாம் சிக்கியுள்ளோம் என்பதை உணர்கிறேன். முதல் முறையாக இப்போதுதான் நான் நிலநடுக்கத்தை உணர்கிறேன். பெரிய ரயில் பின்னால் ஓடினால் எப்படி நிலம் அதிருமோ, அது போல் உள்ளது’ என Andrew Lenard கூறினார்.
இந்த நிலநடுக்கமானது சுமார் 15 முதல் 20 விநாடிகள் வரை நீடித்தது என்று தகவல் வெளியாகியுள்ளது.
ரிக்டர் அளவுகோளில் 5.2 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் நிலநடுக்கமானது மைதானத்தில் ஏற்படவில்லை.
அதனால் போட்டி எந்தவித தடையுமின்றி நடைபெற்றது. இதில் zimbabwe அணி 166 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து பேட்டிங் செய்த ayarland அணி 2 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.