ஆப்கானை மொத்தமாக சரித்த இருவர்! தரமான பதிலடி கொடுத்த யு.ஏ.இ
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி தொடரை சமன் செய்துள்ளது.
கேப்டனின் அதிரடி அரைசதம்
ஷார்ஜாவில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி நடந்தது.
முதலில் ஆடிய அரபு அணியில் கேப்டன் முகமது வசீம் 32 பந்துகளில் 3 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 53 ஓட்டங்கள் விளாசினார்.
Twitter (@EmiratesCricket)
பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்த நிலையில், நிலைத்து நின்று அதிரடியாக ஆடிய ஆர்யன் லக்ரா அரைசதம் அடித்தார். அவர் ஆட்டமிழக்காமல் 47 பந்துகளில் 4 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 63 ஓட்டங்கள் குவித்தார்.
Twitter (@EmiratesCricket)
இதன்மூலம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி 166 ஓட்டங்கள் குவித்தது. கியாஸ் அகமது, அஸ்மதுல்லா தலா 2 விக்கெட்டுகளும், பாசல்ஹக் மற்றும் நபி தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
கடைசிவரை போராடிய முகமது நபி
இதனைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கியது. குர்பாஸ் (21) மற்றும் ஸஸாய் (36) ஓரளவு நல்ல தொடக்கம் தந்தாலும், பின்னர் வந்த வீரர்கள் சொதப்பினர்.
Twitter (@ACBofficials)
அலி நசீர், முகமது ஜவாதுல்லாவின் புயல்வேக பந்துவீச்சில் ஆப்கானிஸ்தான் அணியின் விக்கெட்டுகள் சீட்டு கட்டுபோல் சரிந்தது. ஆனாலும், முகமது நபி தனியாளாய் போராடினார்.
நபி 27 பந்துகளில் 47 ஓட்டங்கள் (2 சிக்ஸர், 5 பவுண்டரிகள்) எடுத்த நிலையில் கடைசி விக்கெட்டாக அவுட் ஆக, ஆப்கானிஸ்தான் 155 ஓட்டங்களுக்கு ஆல் அவுட் ஆகி 11 ரன் வித்தியாத்தில் தோல்வியுற்றது.
Twitter (@ACBofficials)
இந்த வெற்றியின் மூலம் அரபு அணி 1-1 என தொடரை சமன் செய்துள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி டி20 போட்டி 2ஆம் திகதி நடைபெற உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |