ஹாங்காங் சிக்ஸஸ் தொடர்; இந்தியாவை விக்கெட் இழப்பின்றி வீழ்த்திய UAE
uae beat india by 6 wickets in hongkong sixes: ஹாங்காங் சிக்ஸஸ் தொடரில், ஐக்கிய அரபு அமீரக(UAE) அணி இந்தியாவை விக்கெட் இழப்பின்றி வீழ்த்தியுள்ளது.
இந்தியாவை விக்கெட் இழப்பின்றி வீழ்த்திய UAE
2026 ஹாங்காங் சிக்ஸஸ் தொடரின் 12வது லீக் சுற்று போட்டியில் இன்று இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரக(UAE) அணிகள் மோதியது.

நாணய சுழற்சியில் வென்ற நாணய சுழற்சியில் வென்ற ஐக்கிய அரபு அமீரக அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் துடுப்பாட்டம் ஆடிய இந்திய அணி, 6 ஓவர்கள் முடிவில் 94 ஓட்டங்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.

இந்தியா தரப்பில் அதிகபட்சமாக, நடராஜன் 38 ஓட்டங்களும், ராகுல் திரிபாதி 24 ஓட்டங்களும் குவித்தனர்.
94 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஐக்கிய அரபு அமீரக, 4.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 97 ஓட்டங்கள் குவித்து வெற்றி பெற்றது.

தொடக்க ஆட்டக்காரர்கள் காலித் ஷா 52 ஓட்டங்களும், அன்ஷ் டாண்டன் 39 ஓட்டங்களும் குவித்து அணியை வெற்றி பெற செய்தனர்.
இதன் மூலம், ஐக்கிய அரபு அமீரக அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியுள்ளது.