91 ஓட்டங்களில் சுருண்ட அணி! மாயாஜாலம் காட்டிய 22 வயது தமிழன்.. ஒரு விக்கெட்டில் போராடி வென்ற அமீரகம்
துபாயில் நடந்த நமீபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி நடந்தது.
நமீபியா 91
முதலில் ஆடிய நமீபியா அணி 31.1 ஓவரில் 91 ஓட்டங்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக டிரம்பல்மன் 30 ஓட்டங்களும், ஸன் கிரீன் 24 ஓட்டங்களும் எடுத்தனர்.
அமீரக அணியின் தரப்பில் சென்னையை பூர்வீகமாக கொண்ட கார்த்திக் மெய்யப்பன், ஜஹூர் கான் மற்றும் அஃப்சல் கான் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
அதனைத் தொடர்ந்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய அமீரக அணி 2 விக்கெட்டுக்கு 35 ஓட்டங்கள் என சீராக ஓட்டங்களை சேர்த்தது. அதன் பின்னர் டிரம்பல்மன் மற்றும் லுங்கமேனி ஆகியோரின் மிரட்டலான பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தன.
@EmiratesCricket
அமீரகம் போராடி வெற்றி
அணியின் ஸ்கோர் 82 ஆக இருந்தபோது 9வது விக்கெட்டையும் அமீரக அணி இழந்தது. எனினும் இளம் வீரர் அஃப்சல் கான் இறுதிவரை களத்தில் நின்று 35 ஓட்டங்கள் எடுத்து அணியை வெற்றி பெற வைத்தார்.
@EmiratesCricket
ஐக்கிய அரபு அமீரக அணி 33 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 95 ஓட்டங்கள் எடுத்து வெற்றி வாகை சூடியது. நமீபியா அணியின் தரப்பில் லுங்கமேனி 4 விக்கெட்டுகளையும், டிரம்பல்மன் 3 விக்கெட்டுகளையும், ஷிகோங்கோ 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
@EmiratesCricket
@EmiratesCricket