75 டன் தங்கம்! மேற்கத்திய தடையால் ரஷ்யாவின் முக்கிய வர்த்தக மையமாக மாறிய ஐக்கிய அரபு அமீரகம்
மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்ததைத் தொடர்ந்து, ரஷ்யாவின் தங்கத்திற்கான முக்கிய வர்த்தக தளமாக ஐக்கிய அரபு அமீரகம் மாறியுள்ளது.
ரஷ்ய தங்க இறக்குமதிக்கு தடை
உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து ரஷ்யா மீது அடுக்கடுக்காக மேற்கத்திய நாடுகள் பொருளாதாரத் தடைகளை அறிவித்தன. சமீபத்தில், தங்கம் உட்பட ரஷ்யாவின் உலோக இறக்குமதியையும் மேற்கத்திய நாடுகள் தடை செய்தன.
இவ்வாறு, ரஷ்யாவின் பாரம்பரிய ஏற்றுமதி வழிகளைக் குறைத்ததிலிருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ரஷ்ய தங்கத்தின் முக்கிய வர்த்தக மையமாக மாறியுள்ளது என்று ரஷ்ய சுங்கப் பதிவுகள் காட்டுகின்றன.
75.7 டன் ரஷ்ய தங்கம்
உக்ரைன் போர் தொடங்கிய வருடத்தில் ஏறக்குறைய ஆயிரம் தங்க ஏற்றுமதி விவரங்களைக் கொண்ட பதிவுகள், வளைகுடா அரசு 4.3 பில்லியன் டொலர் மதிப்புள்ள 75.7 டன் ரஷ்ய தங்கத்தை இறக்குமதி செய்ததைக் காட்டுகிறது.
இது 2021-ல் வெறும் 1.3 டன்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
Vladimir Putin.REUTERS/Alexsey Druginyn
பிப்ரவரி 24, 2022 முதல் மார்ச் 3, 2023 வரையிலான காலக்கட்டத்தில் ரஷ்யாவிடமிருந்து சீனாவும் துருக்கியும் தலா 20 டன்களை இறக்குமதி செய்து, ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அடுத்த இரண்டு இடங்களைப் பிடித்துள்ளன.
ரஷ்யாவின் சுங்கத் தரவுகளில், மூன்று நாடுகளும் ரஷ்ய தங்கம் ஏற்றுமதியில் 99.8 சதவீத பங்கை பெற்றுள்ளன.