ஐபிஎல் மீண்டும் ஆரம்பம்! வெளியான முழு அட்டவனை: முதல் போட்டியில் CSK-MI மோதல்
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான அட்டவணை அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.
இந்தியாவில் இந்த ஆண்டு துவக்கத்தில் துவங்கிய ஐபிஎல் தொடர், கொரோனா பரவல் காரணமாக பாதியிலே நிறுத்தப்பட்டது.
அதன் பின் இந்தியாவில் தொடர்ந்து கொரோனா பரவல் இருப்பதால், ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் தொடர் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தற்போது போட்டி துவங்கும் மற்றும் அணிகள் எந்தெந்த திகதிகளில் மோதுகின்றன என்பது தொடர்பான அட்டவணை அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.
BCCI announced schedule for remainder of #IPL2021 in UAE. @BCCI pic.twitter.com/M51nhq3eJf
— Doordarshan Sports (@ddsportschannel) July 25, 2021
இதில் முதல் ஆட்டத்தில் மும்பை மற்றும் சென்னை அணிகள் மோதுகின்றன, இப்போட்டி வரும் 19-ஆம் திகதி செப்டம்பர் மாதம் நடைபெறுகிறது.
அதைத் தொடர்ந்து முதல் குவாலிபயர் போட்டி அக்டோபர் 10-ஆம் திகதியும், எலிமினேட்டர் போட்டி அக்டோபர் 11-ஆம் திகதியும், குவாலிபயர் 2 அக்டோபர் 13-ஆம் திகதியும், இறுதிப்போட்டி அக்டோபர் 15-ஆம் திகதியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.