தடுமாறி விழுந்த 16 வயது வீரரை மோசமாக கிண்டல் செய்த இங்கிலாந்து! திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்
ஆயன் கான் தடுமாறி விழும் வீடியோவை கிண்டலாக பகிர்ந்த இங்கிலாந்து வீராங்கனை அலெக்ஸாண்ட்ரா ஹார்ட்லியை ரசிகர்கள் திட்டித் தீர்த்துள்ளனர்
16 வயதே ஆகும் ஆயன் கான் 3 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 4 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்
உலகக் கோப்பை போட்டியில் தடுமாறி விழுந்த அமீரக அணி வீரரை மோசமாக கிண்டல் செய்த இங்கிலாந்து கிரிக்கெட் கிளப்பினை ரசிகர்கள் வசைபாடி வருகின்றனர்.
கீலாங்கில் நேற்று நடந்த போட்டியில் ஐக்கிய அரபு அமீரக அணியும், நெதர்லாந்து அணியும் மோதின. இந்தப் போட்டியில் நெதர்லாந்து 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முன்னதாக அமீரக அணி துடுப்பாட்டம் செய்துகொண்டிருந்த போது, அந்த அணி வீரர் ஆயன் அஃப்ஸல் கான் 5 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அவர் அவுட் ஆன பின்னர் பெவிலியனுக்கு திரும்பினார்.
பவுண்டரி தடுப்பின் மீது அவர் கால் வைத்தபோது தடுமாறி கீழே விழுந்தார். இதுதொடர்பான வீடியோவை இங்கிலாந்து கிரிக்கெட்டின் ஆதரவு கிளப்பான England's Barmy Army தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து ஆயன் கானை கிண்டல் செய்யும் விதமாக ஈமோஜியுடன் வெளியிட்டது.
??? pic.twitter.com/Q3IxOFwdPb
— England's Barmy Army (@TheBarmyArmy) October 16, 2022
இதனைப் பார்த்த ரசிகர்கள் பலர் கோபமடைந்தனர். அவருக்கு 16 வயது தான் ஆகிறது, தடுமாறி விழுந்தவரை இப்படி கிண்டல் செய்வது தவறு என ரசிகர் ஒருவர் கருத்து பதிவிட்டுள்ளார்.
மற்றோரு ரசிகரோ இதில் சிரிப்பதற்கு என்ன இருக்கிறது என கேட்டுள்ளார். இன்னும் சில ரசிகர்கள் இங்கிலாந்து வீரர்கள் மைதானத்தில் தடுக்கியது, ஸ்டோக்ஸ் முகத்தில் பந்து தாக்கியது ஆகிய வீடியோக்களை பகிர்ந்து பதிலடி கொடுத்துள்ளனர்.
This is better ? pic.twitter.com/SrvvY9gkqK
— zikriamojaddedi (@zikria_mojadded) October 16, 2022
Good start to the trip? #T20WorldCup2022
— Alexandra Hartley (@AlexHartley93) October 16, 2022
pic.twitter.com/mfDpMiw8Hr