வாடகை டாக்ஸி சாரதியாக வாழ்க்கையை தொடங்கியவர்... மலைக்க வைக்கும் அவரது சொத்து மதிப்பு
இந்தியாவில் பிறந்து மத்திய கிழக்கு நாடுகளில் குடியேறி, கடும் உழைப்பால் பெரும் கோடீஸ்வரரானவர்களில் ஒருவர் Micky Jagtiani.
கோடீஸ்வர இந்தியர்களில் ஒருவர்
ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் மாகாணத்தில் உள்ள கோடீஸ்வர இந்தியர்களில் ஒருவராக Micky Jagtiani அறியப்படுகிறார். நீண்ட பல மாதங்கள் நோய்வாய்ப்பட்டிருந்த மிக்கி ஜக்தியானி கடந்த மே மாதம் துபாயில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
மிக்கி ஜக்தியானி தமது ஆரம்ப காலகட்டத்தில் டாக்சி சாரதியாகவும், ஹொட்டல் ஊழியராகவும் பணியாற்றியுள்ளார். குவைத்தில் பிறந்த மிக்கி ஜக்தியானி, இந்தியாவில் சென்னை மற்றும் மும்பையில் கல்வியை முடித்துள்ளார்.
பின்னர், லண்டனில் கணக்கியல் கல்லூரி ஒன்றில் சேர்ந்த நிலையில் விதி விளையாட, பெற்றோர் மற்றும் சகோதரரின் மரணம் கல்லூரி படிப்பை கைவிடும் நிலைக்கு தள்ளியது. இதனையடுத்து லண்டனில் டாக்சி சாரதியாகவும், ஹொட்டல் ஊழியராகவும் வாழ்க்கையை தொடங்கியுள்ளார்.
இந்த நிலையில், 6000 அமெரிக்க டொலர் மதிப்பிலான தமது சகோதரரின் வணிகத்தை முன்னெடுத்து நடத்தும் கட்டாயம் ஏற்பட, குழந்தைகளுக்கான தயாரிப்புகளை விற்பனை செய்யும் வகையில் தமது கடையை மாற்றியுள்ளார்.
20 நாடுகளில் 6,000 கடைகள்
அடுத்த 10 ஆண்டுகளில், நகரின் பல்வேறு பகுதிகளில் மேலும் 6 கடைகளை திறக்கும் வாய்ப்பு பெற்றார். துபாய் மாகாணத்தில் குடிபெயரும் முன்னர் மொத்தம் 20 நாடுகளில் 6,000 கடைகளை திறக்கும் அளவுக்கு மிக்கி ஜக்தியானி பெரும் தொழிலதிபராக உருவாகியிருந்தார்.
தமது புத்திசாலித்தனமான முதலீட்டு முடிவுகளால், 2008ல் Forbes வெளியிட்ட கோடீஸ்வரர்கள் பட்டியலில் இணைந்தார். துபாய் மாகாணத்தில் இருந்து செயல்படும் இந்திய தொழிலதிபர்களில் மிக்கி ஜக்தியானியும் ஒருவர்.
2023 மே மாதத்தில் மிக்கி ஜக்தியானி மரணமடைந்த நிலையில், அவரது மொத்த சொத்து மதிப்பு 43,194 கோடி என்றே தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |