முதல்முறையாக வங்கதேசத்திற்கு எதிரான T20 தொடரை கைப்பற்றிய ஐக்கிய அரபு அமீரகம்
வங்கதேச கிரிக்கெட் அணி, ஐக்கிய அரபு அமீரகம் சென்று 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது.
முதல் போட்டியில் வங்கதேசமும், 2வது போட்டியில் ஐக்கிய அரபு அமீரகமும் வெற்றி பெற்றிருந்தது.
T20 தொடரை வென்ற UAE
3வது போட்டி நேற்று ஷார்ஜாவில் நடைபெற்றது. நாணய சுழற்சியில் வென்ற ஐக்கிய அரபு அமீரக அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் துடுப்பாட்டம் ஆடிய வங்கதேச அணி 20 ஓவர்கள் முடிவில், 9 விக்கெட் இழப்பிற்கு, 162 ஓட்டங்கள் எடுத்தது.
அதிகபட்சமாக ஜாக்கர் அலி 41 ஓட்டங்களும், தன்ஜித் ஹசன் 40 ஓட்டங்களும் எடுத்தனர். ஹைதர் அலி 4 ஓவர்கள் வீசி, 7 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து, 3 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.
தொடர்ந்து 163 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஐக்கிய அரபு அமீரக அணி, 19.1 ஓவர் முடிவில், 3 விக்கெட்களை இழந்து, 166 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. அலிஷான் ஷராபு அரை சதமடித்து, 68 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட T20 தொடரை, 2-1 என்ற கணக்கில் ஐக்கிய அரபு அமீரக அணி கைப்பற்றியது.
ஐக்கிய அரபு அமீரக அணி, முதல்முறையாக வங்கதேசத்திற்கு எதிரான T20 தொடரை கைப்பற்றியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |