இனி இந்த PF சேவைகள் இணையதளத்தில் இல்லை... EPFO-வில் புதிய மாற்றம்
கோடிக்கணக்கான பிஎஃப் சந்தாதாரர்களுக்கு ஈபிஎஃப்ஓ (EPFO) நிர்வாகம் ஒரு அதிரடியான மாற்றத்தை அறிவித்துள்ளது.
UAN Activation
ஈபிஎஃப்ஓ நிர்வாகமானது தனது ஒருங்கிணைந்த உறுப்பினர் தளத்தை (Unified Member Portal) சமீபத்தில் மேம்படுத்தியது. இதனை அடுத்து பிஎஃப் இணையதளத்தில் சில வசதிகள் நீக்கப்பட்டு சில வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் UAN Activation மற்றும் புதிய UAN உருவாக்கம் ஆகியவற்றை நேரடியாக EPFO இணையதளத்தில் இனி செய்ய முடியாது. இதற்கு மாற்றாக இந்த சேவைகள் தற்போது UMANG செயலிக்கு மாற்றப்பட்டுள்ளன.
எனவே பிஎஃப் சந்தாதாரர்கள் UMANG செயலியை பயன்படுத்தி, ஆதார் அடிப்படையிலான முக அங்கீகார முறையை பின்பற்றி மட்டுமே இந்த சேவைகளை பெற முடியும்.
மட்டுமின்றி, ஈபிஎஃப்ஓ இணையதளத்தில் UAN-ஐ கண்டறியும் முறை எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. பதிவுசெய்யப்பட்ட மொபைல் இலக்கம் மற்றும் அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி பயனர்கள் தங்கள் UAN-ஐ கண்டறியலாம்.
பணியாளர்கள் அல்லது ஓய்வூதியதாரர்களின் இறப்பு தொடர்பான கோரிக்கைகளை பழைய முறைப்படியே ஈபிஎஃப்ஓ இணையதளம் வழியாக தொடர்ந்து விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோசடிகள் தவிர்க்க
விண்ணப்பங்கள், கோரிக்கைகள் நடைமுறையில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. பிஎஃப் சந்தாரர்களுக்கு இன்னும் வேகமான, நம்பகமான மற்றும் பாதுகாப்பான சேவைகளை வழங்குவதற்காகவே இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, முக அங்கீகார முறையை பயன்படுத்துவதன் மூலம் மோசடிகள் தவிர்க்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், பிஎஃப் பணத்தை யுபிஐ, ஏடிஎம் மூலம் எடுக்கும் வசதி சோதனை ஓட்டத்தில் உள்ளது. விரைவில் இது உத்தியோகப்பூர்வமாக நடைமுறைக்கு வர உள்ளது.
இது வந்துவிட்டால் தற்போது போல வார கணக்கில் காத்திருக்காமல் நினைத்த நேரத்தில் யுபிஐ, ஏடிஎம் மூலம் பிஎஃப் பணத்தை எடுத்து பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |