உபர் டாக்ஸி பயணி விமான பயணத்தைத் தவறவிட்டால்... இந்த நகரத்தாருக்கு இழப்பீடு உறுதி
இந்தியாவில் உபர் டாக்ஸியில் பயணம் மேற்கொண்டு பயணி ஒருவர் தாமதத்தால் விமான பயணத்தைத் தவறவிட்டால், தற்போது இழப்பீடு வழங்கும் திட்டத்தை உபர் அறிவித்துள்ளது.
மருத்துவச் செலவுகளையும்
இதனால், விமானத்தைத் தவறவிடும் வாடிக்கையாளருக்கு ரூ 7,500 வரையில் இழப்பீடு பெற முடியும். இந்த அதிரடி திட்டமானது மும்பை நகர வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தவறவிட்ட விமான பயண காப்பீடு என்றே குறித்த திட்டத்திற்கு பெயரிட்டுள்ளனர். இத்துடன் எதிர்பாராத வகையில் விபத்து ஏற்பட்டால் மருத்துவச் செலவுகளையும் ஏற்பதாக உபர் நிறுவனம் உறுதி செய்துள்ளது.
பிப்ரவரி மாத இறுதியில் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. உபர் நிறுவனம் ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்தத் திட்டத்தை வழங்க உள்ளது.
விமான நிலையத்திற்கு சரியான நேரத்தில் செல்வது மிக முக்கியமானதாக இருப்பதால், அங்கு சவாரிகளை ஏற்றுக்கொள்வதில் டாக்சி சாரதிகள் தயக்கம் காட்டியதை அடுத்து, உபர் டாக்சி நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளது.
அதிக போக்குவரத்து நெரிசல் காரணமாக விமான நிலையத்திற்கு சரியான நேரத்தில் செல்லத் தவறியதால் பயணிகளால் அடிக்கடி துஷ்பிரயோகத்தை எதிர்கொள்ள வேண்டியிருப்பதாக சாரதிகள் முறையிடுகின்றனர்.
ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்
மேலும், உபர் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களிடம் டாக்ஸி கட்டணத்தை விட ரூ.3 கூடுதலாக வசூலித்துக் கொண்டு இந்தக் காப்பீட்டை வழங்குகிறது. வெளியான அறியிக்கையின் அடிப்படையில்,
உபர் பயணத்தை பதிவு செய்யும் போது சேருமிடம் விமான நிலையமாகக் குறிப்பிடப்பட்டால் மட்டுமே, தவறவிட்ட விமானங்களுக்கான காப்பீட்டுத் தொகையைப் பெற முடியும்.
இந்தத் திட்டத்தின் கீழ் பயணி ஒருவர் காப்பீட்டைக் கோர விரும்பினால் அவர்கள் தங்கள் பயண விவரங்களை சில ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.
அதில், கையொப்பமிடப்பட்ட உரிமைகோரல் படிவம், தவறவிட்ட விமான டிக்கெட்டின் நகல், முன்பதிவு செய்யப்பட்ட புதிய விமானத்தின் டிக்கெட் மற்றும் உரிமைகோரல் தொகையை மாற்றுவதற்கான ரத்து செய்யப்பட்ட காசோலை ஆகியவை இதில் அடங்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |