லண்டனில் Uber விலை அதிரடி உயர்வு! எவ்வளவு தெரியுமா? கடும் அதிர்ச்சியில் மக்கள்
லண்டனில் உபர் தன்னுடைய பயண் விலையை 10 சதவீதம் உயர்த்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதால், இதை அறிந்த மக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.
பிரித்தானியாவின் தலைநகரான லண்டனில் Uber தன்னுடைய விலையை உயர்த்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக லண்டனில் விலை உயர்த்தப்படுகிறது.
அதன் படி வழக்கம் போல் வரும் கட்டணத்தில் இருந்து 10 சதவீதம் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி விமான நிலையங்களுக்கான பயணங்களின் போது, பரபரப்பான போக்குவரத்து நேரத்தில், அது 25 சதவீதம் உயர்த்தப்படுமாம்.
இதற்கு முக்கிய காரணம் விமான நிலையங்களில் ஓட்டுனர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளதால், அதை சரி செய்யும் நோக்கில் இந்த விலை உயர்வு கொண்டுவரப்பட்டுள்ளதாம். நவம்பர் 11, அதாவது இன்று முதல் இந்த விலை உயர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உதாரணமாக உபரில் பயணம் செய்ய வேண்டும் என்றால், அதன் குறைந்த பட்ச கட்டணம் 5 பவுண்ட் என்பது 5.50 பவுண்ட் ஆக உயரும். அதுவே பரபரப்பான விமான நிலைய போக்குவரத்து சூழலின் போது, வழக்கமான கட்டணத்துடன் 25 சதவீதம் அதிகமாக வசூலிக்கப்படும்.
கொரோனாவிற்கு முந்தைய காலகட்டத்துடன் ஒப்பிடும்போது, தற்போது குறித்த செயலியில் குறைவான ஓட்டுனர்கள் இருப்பதன் எதிரொலியாகவும், பயணிகளிடமிருந்து அதிக தேவைக்காகவும் இந்த விலை உயர்வு வந்துள்ளதாக ஓட்டுனர்கள் கூறியுள்ளனர்.
தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் நீகப்பட்டுள்ளதால், Uber தேவை உயர்ந்துள்ளது,.ஆனால் ஓட்டுநர்கள் எண்ணிக்கை அந்த அளவிற்கு உயரவில்லை.
ஊரடங்கு நீக்கப்பட்டதிலிருந்து ஆயிரக்கணக்கான முன்னாள் ஓட்டுநர்கள் Uber பயன்பாட்டில் மீண்டும் கையொப்பமிடவில்லை.
ஏனெனில் ஊரடங்கின் போது, ஓட்டுனர்கள் பலர் வேறு வேலைகளுக்கு சென்றுவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது,