சுவிட்சர்லாந்தின் UBS வங்கி Credit Suisse-யை வாங்கிக்கொள்ள ஒப்புதல்., தப்பித்தது ஐரோப்பிய நிதி சந்தை..!
சுவிட்சர்லாந்தின் மிகப்பெரிய வங்கிக் குழுவான UBS, நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள Credit Suisse நிறுவனத்தை வாங்க ஒப்புக்கொண்டதாக Bloomberg தெரிவித்துள்ளது.
பிரச்சனையில் சிக்கிக்கொண்ட சுவிட்சர்லாந்தின் 2-வது பாரிய வங்கி
சுவிட்சர்லாந்தின் 2-வது பாரிய வங்கியான Credit Suisse புதிய நிதியை திரட்ட முடியாமல் பணப்புழக்க பிரச்சனையில் சிக்கிக்கொண்டது. இந்த பிரச்சனையை சமாளிக்கும் விதமாக சுவிஸ் நாட்டின் மத்திய வங்கியான Swiss National Bank-லிருந்து 50 பில்லியன் சுவிஸ் பிராங்க் (54 பில்லியன் அமெரிக்க டொலர்) அளவிலான தொகையை கடனாக பெற்றது.
இருப்பினும், நிலைமையை மேம்படுத்திக்கொள்ள முடியாத நிலையில் கிரெடிட் சூயிஸ் வங்கியை மொத்தமாகவும், பகுதியாகவும் விற்பனை செய்யமுடிவு செய்யப்பட்டது.
UBS-Credit Suisse பேச்சுவார்த்தை
இதையடுத்து, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் UBS மற்றும் கிரெடிட் சூயிஸ் வங்கிகளின் உயர்மட்ட நிர்வாக குழு பேச்சுவார்த்தை நடந்தது.
இந்த இரு வங்கிகளும் இணைக்கப்பட்டால் சுவில் வங்கி கட்டமைப்பு வலிமை அடைவது மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த ஐரோப்பிய சந்தையிலும் நிதிநிலை குறித்த அச்சம் குறையும் என்பதால், UBS வங்கி கிரெடிட் சூயிஸ் வங்கியை மொத்தமாக வாங்க முடிவு செய்துள்ளது.
3.25 பில்லியன் டொலர் ஒப்பந்தம்
Credit Suisse-விடமிருக்கும் அனைத்துப் பங்குகளையும் சேர்த்து அந்நிறுவனத்தையும் அரசு தரகு ஒப்பந்தத்தில் 3.25 பில்லியன் அமெரிக்க டொலருக்கு வாங்கிக்கொள்ள UBS வங்கி ஒப்புக்கொண்டது.
கிரெடிட் சூயிஸ் நிறுவனத்திய வாங்கிக்கொள்வதால் எதிர்நோக்கவுள்ள 5.4 பில்லியன் அமெரிக்க டொலர் வரையிலான இழப்புகளை ஏற்றுக்கொள்வதாகவும் UBS வங்கி தெரிவித்துள்ளது.