'இளமையிலே' கவிஞர் வைரமுத்து செய்த விளையாட்டு

Tamil language Education Tamil Elearning
By Thiru Feb 13, 2023 09:28 PM GMT
Report

கொஞ்சம் பாட்டு, கொஞ்சம் இலக்கணம் – வழங்குவது uchchi.com

‘இராஜபார்வை’ திரைப்படத்தில் இசைஞானி இளையராஜா இசையமைத்த ‘அந்திமழை பொழிகிறது’ பாடலைக் கேட்டிருப்பீர்கள். கவிஞர் வைரமுத்து எழுதிய பாடல்.

அதில் முதலாவது சரணத்தில் சில வரிகள் வரும்:

 தனிமையிலே வெறுமையிலே

எத்தனை நாளடி இளமையிலே

கெட்டன இரவுகள் சுட்டன கனவுகள்

இமைகளும் சுமையடி இளமயிலே

via Facebook

இதிலே வருகின்ற இளமையிலே, இளமயிலே ஆகிய இரண்டு சொற்றொடர்களும் ஒலிப்பில் ஒரே விதமாகத்தான் இருக்கும்.

அதாவது ‘இளமையிலே’ என்று சொல்லிப் பார்த்தீர்கள் என்றால் அது இயல்பாகவே ‘இளமயிலே’ என்பது போலத்தான் ஒலிக்கும். 'மை' என்ற எழுத்து 'ம' போல ஒலிக்கும்.

‘மீசையை முறுக்கு’ என்று சொல்லும்போது அதில் வரும் ‘சை’, ‘யை’ ஆகிய எழுத்தொலிகளுக்கு யாரும் அழுத்தம் தருவதில்லை.

‘மீசய முறுக்கு’ என்பதுபோலத்தான் சொல்வதுண்டு. ஏன் இப்படி?

‘ஐ’ ஒலி இப்படிக் குறுகி ‘அ’ போல ஒலிப்பதைத் தமிழ் இலக்கணம் 'ஐகாரக் குறுக்கம்' என்று சொல்லும்.

via Facebook

‘ஐ’ என்பது ஆ, ஈ, ஊ, ஏ, ஓ, ஔ போல இரண்டு மாத்திரை அளவு காலம் ஒலிக்கும் நெடில் எழுத்து என்பதைப் பள்ளிக்காலத்தில் படித்திருப்போம்.

ஆனால் ஓர் எழுத்தாகத் தன்னைத் தானே குறிக்கும்போது மட்டுமே 'ஐ' இரண்டு மாத்திரை அளவு காலம் ஒலிக்கும்.

சொற்களில் அந்த எழுத்து வரும்போது தனக்கு விதிக்கப்பட்ட கால அளவை விடக் குறைந்தே ஒலிக்கும். இதனைத்தான் 'ஐகாரக் குறுக்கம்' என்று சொல்கிறோம்.

கவிதை இலக்கணத்தில் அசை, தளை முதலான செய்யுள் உறுப்புகளைச் சரிவரப் புரிந்து கொள்வதற்கு இந்த விதியை அறிந்திருப்பது முக்கியமானது.

ஐகாரக் குறுக்க விதியைப் பயன்படுத்தித்தான் ‘அந்திமழை பொழிகிறது’ பாடலில் ‘இளமையிலே, இளமயிலே’ என்று வார்த்தை விளையாட்டு நிகழ்த்தியிருக்கிறார் கவிஞர் வைரமுத்து.

Uchchi.com இன் மெட்டுக்குப் பாட்டு எழுதுவது எப்படி? என்ற கற்கை நெறியில் இணைந்து கொண்டு நீங்களும் இந்த நுட்பங்களைக் கற்றுக்கொள்ளலாம்! சொற்சுவை மிகுந்த பாடல்கள் எழுதலாம்! 

மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US