டெல்லியின் அறிவிக்கப்படாத அடிமை- தவெக அரசை சாடிய உதயநிதி ஸ்டாலின்
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைக்கு எதிராகவும், தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலக வலியுறுத்தியும் டெல்லியில் இன்று போராட்டம் நடத்தப்படும் என கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் அறிவித்துள்ளனர்.
இதையடுத்து, டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த வந்த இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்து அப்புறப்படுத்தினர்.
மேலும், அக்கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கேவும் கைது செய்யப்பட்டார்.

இதேபோல், அக்கட்சிக்கு ஆதரவாக சென்னை பெசன்ட் நகரில் போராட்டத்தில் ஈடுபட்ட 30க்கும் மேற்பட்ட இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
மேலும், சென்னை சேப்பாக்கத்திலும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் அமைப்பினரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்த கைதிற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அவர் கூறியதாவது..,
தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என்று பெசன்ட் நகரில் அமைதியாக போராடிய இளைஞர்கள் மீது காவல் அராஜகத்தை ஏவி கைது செய்துள்ள இந்த Sofa Model அரசை வன்மையாக கண்டிக்கிறேன்.
ஒட்டுமொத்த நாடும் - இவர்கள் கூட்டணி வைத்திருப்பதாக சொல்லிக்கொள்ளும் சில கட்சிகளும் கூட இந்தப் போராட்டத்தை ஆதரிக்கும் போது, இந்த Dummy முதலமைச்சர், யாருக்கு பயந்து நடுங்கி இந்தப் போராட்டத்தை நசுக்குகிறார்.
சுயமரியாதையும் - நாட்டின் மீதும் அக்கறையும் கொண்ட அறிவார்ந்த இளைஞர்களை கைது செய்வதன் மூலம், டெல்லியின் அறிவிக்கப்படாத அடிமை என்பதை இந்த முதலமைச்சர் நிரூபித்துள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள இளைஞர்களை உடனே விடுக்க வேண்டும். ஜனநாயகத்தைக் காப்பாற்றத் துடிக்கும் இளைஞர் படையின் குரலை ஒடுக்குவதை ஏற்கமுடியாது.
தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என்று பெசன்ட் நகரில் அமைதியாக போராடிய இளைஞர்கள் மீது காவல் அராஜகத்தை ஏவி கைது செய்துள்ள இந்த Sofa Model அரசை வன்மையாக கண்டிக்கிறேன். ஒட்டுமொத்த நாடும் - இவர்கள் கூட்டணி வைத்திருப்பதாக சொல்லிக்கொள்ளும் சில கட்சிகளும் கூட இந்தப் போராட்டத்தை ஆதரிக்கும் போது, இந்த Dummy முதலமைச்சர், யாருக்கு பயந்து நடுங்கி இந்தப் போராட்டத்தை நசுக்குகிறார். சுயமரியாதையும் - நாட்டின் மீதும் அக்கறையும் கொண்ட அறிவார்ந்த இளைஞர்களை கைது செய்வதன் மூலம், டெல்லியின் அறிவிக்கப்படாத அடிமை என்பதை இந்த முதலமைச்சர் நிரூபித்துள்ளார். கைது செய்யப்பட்டுள்ள இளைஞர்களை உடனே விடுக்க வேண்டும். ஜனநாயகத்தைக் காப்பாற்றத் துடிக்கும் இளைஞர் படையின் குரலை ஒடுக்குவதை ஏற்கமுடியாது.
— Udhay (@Udhaystalin) October 10, 2026
மேலும், இன்று தமிழ்நாட்டில் போராடுபவர்களை தவெக அரசு ஒடுக்குவதைப் பார்க்கும்போது ஒன்று மட்டும்தான் உறுதியாகிறது. டெல்லியில் இருக்கும் தவெகதான் பாஜக, தமிழ்நாட்டில் இருக்கும் பாஜகதான் தவெக என்று கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இன்று தமிழ்நாட்டில் போராடுபவர்களை தவெக அரசு ஒடுக்குவதைப் பார்க்கும்போது ஒன்று மட்டும்தான் உறுதியாகிறது. டெல்லியில் இருக்கும் தவெகதான் பாஜக, தமிழ்நாட்டில் இருக்கும் பாஜகதான் தவெக!
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) October 10, 2026
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |