டெல்லியோ, லோக்கலோ எங்கிருந்து வந்தாலும் சரி.., விஜயை மறைமுகமாக விமர்சித்த உதயநிதி
டெல்லியில் இருந்து வந்தாலும் சரி, லோக்கலில் இருந்து வந்தாலும் சரி திமுகவுக்கே வெற்றி என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்து மாநாடு நடத்திவிட்டு அதற்கான வேலைகளை செய்து வருகிறார். அந்தவகையில் விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
உதயநிதி பேச்சு
இந்நிலையில், விஜயின் மாநாடு நடைபெற்ற விக்கிரவாண்டியை அடுத்த திருவெண்ணெய்நல்லூரில் நடந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.
பின்னர் பேசிய அவர், "எந்த திசையில் இருந்து யார் வந்தாலும் திமுகவுக்கே வெற்றி கிடைக்கும். டெல்லியில் இருந்து வந்தாலும் சரி, லோக்கலில் இருந்து வந்தாலும் சரி திமுகவுக்கு தான் வெற்றி.
2026 -ம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் எந்த கூட்டணி அமைத்தாலும் நமக்கு தான வெற்றி" என்று மறைமுகமாக விஜயை விமர்சித்து பேசியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |