தந்தை மு.க ஸ்டாலினை விஞ்சி கெத்து காட்டும் மகன் உதயநிதி! 50,000க்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி!
தமிழக தேர்தலில் முக ஸ்டாலினை விட மிக அதிகமான வாக்கு வித்தியாசத்தில் அவர் மகனான உதயநிதி முன்னிலை வகித்து வந்த நிலையில் தற்போது வெற்றி பெற்றுள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 6ம் திகதி நடைபெற்றது. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் பெரும்பான்மை ஆட்சி அமைக்க தேவையான இடங்களில் திமுக முன்னிலை பெற்றுள்ளது.
இந்த நிலையில், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் 50,000க்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் கஸ்ஸாலியை வீழ்த்தியுள்ளார்.
அதேசமயம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், எட்டு சுற்றுகளின் முடிவில், தான் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில், 26, 764 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார்.
அதிமுக வேட்பாளர் ஆதிராஜாராம் 9489 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பெறுகிறார். வாக்கு வித்தியாசம் 17,275 ஆகும்.
எப்படியிருந்தாலும் உதயநிதியை விட கூடுதல் வாக்கு வித்தியாசத்தில் ஸ்டாலின் ஜெயிக்க முடியாது என்ற நிலையே தற்போது நீடித்து வரும் நிலையில் தந்தையை விஞ்சிய மகனாக அவர் இந்த தேர்தலில் திகழ்கிறார்.