தவழ்ந்து தவழ்ந்து போறதுனால அவருக்கு கால் வலி வருது.., உதயநிதி சர்ச்சை பேச்சு
தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சர்ச்சையான கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பேசியது...
சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "சாதி, மாதங்களுக்கு அப்பாற்பட்டது தான் அதிமுக கட்சி. யார் வேண்டுமானாலும் கோயிலுக்கு செல்லலாம்.
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்துக்கு யார் வேண்டுமானாலும் போகலாம். எனக்கு கால் வலி உள்ளது. அதில் வாய்ப்பு இருந்தால் பங்கேற்பேன்" என்று கூறியிருந்தார்.
உதயநிதி பேசியது..
அதிமுக குறித்து பல்வேறு விமர்சனங்களை கூறி வருபவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். அதுவும் எடப்பாடி பழனிசாமி குறித்து பொது வெளியில் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலினிடம், அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்பது குறித்து யோசிப்பதாக எடப்பாடி பழனிசாமி கூறியது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த உதயநிதி, "அவர் தவழ்ந்து தவழ்ந்து போறதுனால அடிக்கடி அவருக்கு கால் வலி வருகிறது போல" என்று சர்ச்சையான பதில் ஒன்றை அளித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |