மோடியின் கால் தூசிக்கு கூட உதயநிதி சமம் இல்லை: சரத்குமார் சர்ச்சை பேச்சு
கோயம்புத்தூர் மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலையை ஆதரித்து சரத்குமார் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை சரத்குமார் பாஜகவில் இணைத்த நிலையில், அவரது மனைவி ராதிகாவுக்கு விருதுநகர் மக்களவை தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலையை ஆதரித்து நடிகர் சரத்குமார் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார்.
அவர் பேசியது
நடிகர் சரத்குமார் பிரச்சாரத்தில் பேசுகையில், "கடந்த 50 ஆண்டுகளாக இந்தியாவை ஆட்சி செய்த காங்கிரஸ் நல்ல திட்டங்களை செயல்படுத்தவில்லை. அதற்கு பதிலாக பாஜகவை குறை சொல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
பெண்களுக்கு உரிமை தொகை, இலவச பேருந்து வசதி ஆகியவற்றை மக்களுக்கு வழங்கிவிட்டு திமுக அநாகரிகமாக பேசி வருகிறது.
உலகமே பாராட்டும் தலைவராக இருக்கும் நரேந்திர மோடியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்து வருகிறார். அவர் மோடியின் கால் தூசிக்கு கூட சமம் இல்லை.
காங்கிரஸ், திமுக கட்சிகள் சேர்ந்து கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்தது. மத்திய அரசு வழங்கும் நிதியை வைத்தும் திமுக ஆக்கப்பூர்வமான திட்டத்தை செயல்படுத்தவில்லை. மீண்டும் மோடி பதவியேற்க அண்ணாமலைக்கு வாக்களியுங்கள்" என்று கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |