inky pinky ponky போட்டுத் தப்பிக்கும் கைதிகள் - தவெக அரசை விளாசிய உதயநிதி ஸ்டாலின்
udhayanidhi stalin slams tvk govt for prisoners escape: inky pinky ponky போட்டுத் கைதிகள் தப்பி செல்வதாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.
கோவை சிறையிலிருந்து தப்பிய கைதி
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக சிறைக்கைதிகள் தப்பி செல்லும் சம்பவம் அதிகரித்துள்ளது.
புழல், தேனியைத் தொடர்ந்து கோவை மத்தியச் சிறையில் இருந்து திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட ராகவன் என்ற சிறைக்கைதி இன்று தப்பியோடியுள்ளார்.

தப்பியோடிய சிறைக்கைதிகளை தனிப்படை அமைத்து காவல்துறையினர் தேடி வரும் நிலையில், அவரை அழைத்து சென்ற 4 காவலர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கைதிகள் தப்பி செல்லும் சம்பவத்திற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன
உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்
இது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், "இந்த சோப்ளாங்கி ஆட்சியில் புழல், தேனியைத் தொடர்ந்து கோவை மத்தியச் சிறையில் இருந்தும் ஒரு கைதி தப்பிச் சென்றுள்ளார்.
அடுத்து பாளையம்கோட்டையா? சேலமா? எனக் கைதிகள் inky pinky ponky போட்டுத் தப்பிச் செல்லும் அளவுக்கு Dummy முதலமைச்சரின் ஆட்சி லட்சணம் இருக்கிறது.
தோல்வி பயத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளுக்கு முதலமைச்சர் ஓடுகிறார். மறுபுறம் கைதிகளோ, இது கையாலாகாத அரசு என தெரிந்து கொண்டு சிறையில் இருந்து ஓட்டம் எடுக்கின்றனர்.
இந்த சோப்ளாங்கி ஆட்சியில் புழல், தேனியைத் தொடர்ந்து கோவை மத்தியச் சிறையில் இருந்தும் ஒரு கைதி தப்பிச் சென்றுள்ளார். அடுத்து பாளையம்கோட்டையா? சேலமா? எனக் கைதிகள் inky pinky ponky போட்டுத் தப்பிச் செல்லும் அளவுக்கு Dummy முதலமைச்சரின் ஆட்சி லட்சணம் இருக்கிறது. தோல்வி பயத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளுக்கு முதலமைச்சர் ஓடுகிறார். மறுபுறம் கைதிகளோ, இது கையாலாகாத அரசு என தெரிந்து கொண்டு சிறையில் இருந்து ஓட்டம் எடுக்கின்றனர். இனி பணியிடமாற்றம், சஸ்பெண்ட் செய்யவேண்டும் என்றால் முதலமைச்சர் தன்னைத் தானே தான் செய்துகொள்ள வேண்டும். 'மெத்' அரசின் மெத்தனப் போக்கால் தமிழ்நாட்டு மக்களின் பாதுகாப்பு தொடர்ந்து கேள்விக்குறி ஆகி வருவதை வன்மையாகக் கண்டிக்கிறேன். #LawAndOrder #Coimbatore #TVKFails
— Udhay (@Udhaystalin) October 31, 2026
இனி பணியிடமாற்றம், சஸ்பெண்ட் செய்யவேண்டும் என்றால் முதலமைச்சர் தன்னைத் தானே தான் செய்துகொள்ள வேண்டும்.
'மெத்' அரசின் மெத்தனப் போக்கால் தமிழ்நாட்டு மக்களின் பாதுகாப்பு தொடர்ந்து கேள்விக்குறி ஆகி வருவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.