நானும் முதல்வரும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள் - சட்டமன்றத்தில் பேசிய உதயநிதி
நானும் முதல்வரும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள் என சட்டமன்றத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.
பேரவை தலைவர் தேர்வு
தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரின் 2வது நாளான இன்று பேரவை தலைவர் மற்றும் துணை தலைவர் இன்று தேர்வு செய்யப்பட்டனர்.
பேரவை தலைவர் ஜேசிடி பிரபாகரை அவை முன்னவர் செங்கோட்டையன் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் சபாநாயகரை இருக்கைக்கு அழைத்து சென்று அமர வைத்தனர்.

இதைத்தொடர்ந்து, அனைத்து கட்சிகளை சேர்ந்தவர்களும் சபாநாயகருக்கு வாழ்த்து தெரிவித்து பேசினர்.
உதயநிதி ஸ்டாலின் பேச்சு
இதில் பேசிய சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், "பெரியார், அண்ணா, கலைஞர், திமுக தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என எங்கள் தலைவர்களை வணங்கி உரையை தொடங்குகிறேன்.

சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி மக்களுக்கு எனது நன்றி. எங்களின் கூட்டணிக்கு 1.80 கோடி வாக்குகளை அளித்த தமிழக மக்களுக்கு நன்றி.
வரலாற்று சிறப்புமிக்க சட்டசபையில் தலைவர், துணை தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களுக்கு தலைவர் சார்பாக வாழ்த்துகள்!
நீங்கள் சிரித்த முகத்திற்கு சொந்தகாரர் என பல சொல்லி கேள்விபட்டுள்ளேன். உங்களுக்கு பேரவை மரபுகள், விதிகள் புதிது அல்ல. நீங்கள் நடுநிலையோடு செயல்பட வேண்டும் என்பது அனைவரது எதிர்பார்ப்பு.
முதலமைச்சர் அனைத்து கட்சி தலைவர் வீட்டுகளுக்கு சென்று வாழ்த்துகளை பெற்றார். அந்த அரசியல் நாகரீகம் இந்த அவையிலும் இருக்க வேண்டும். திமுக என்றைக்கும் ஆக்க சக்தி தான். எதிரி கட்சியாக இல்லாமல், ஆக்கப்பூர்வமான எதிர் கட்சியாக இருந்து செயல்படும்.
இந்தியாவை திரும்பி பார்க்க வைத்த சட்டசபை இந்த தமிழ்நாடு சட்டசபை. தமிழ்நாட்டின் வளர்ச்சி என்று வரும் போதும் அனைவரும் ஒரே வரிசையில் நின்று செயல்படுவோம்.
அதை தான் தமிழ்நாடு மக்களும் எதிர்பார்க்கிறார்கள். இந்த புதிய அரசு உங்களுக்கு வாக்களித்தாக மக்களுக்காகவும் செயல்பட வேண்டும்.
முதலமைச்சர் அவர்களும், இன்றைக்கு எதிர்க்கட்சித் தலைவராக இருக்கின்ற நானும் ஒரே கல்லூரியில் பயின்றிருந்தாலும் அரசாங்கத்தை நடத்துகிறதில் தி.மு.க.தான் சீனியர் பேட்ச்.
அந்த அடிப்படையில் எங்களின் அரசியல் அனுபவத்தை பகிர்ந்துகொள்ள தயாராக இருக்கிறோம். அதனை ஏற்க நீங்களும் தயாராக இருங்கள். காரணம், நமக்கு தமிழ்நாட்டின் நலன் தான் முக்கியம்.
தமிழ்தாய் வாழ்த்துக்கு மூன்றாம் இடம் தமிழக மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு வங்கத்தில் தமிழ்தாய் வாழ்த்து பாடப்படவில்லை. நீண்ட வருடங்களுக்கு பின் நிறைய பெண் சட்டமன்ற உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளீர்கள், வாழ்த்துகள்.
பெரும்பான்மையை மக்கள் ஆளும் கட்சிக்கு வழங்காமல் போனாலும், திமுக தோழமை கட்சி ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளதற்கு வாழ்த்துகள். பணிகள் சிறக்கப்பட்டும். வெல்க தமிழ், வாழ்க தமிழ்நாடு, மக்களை பிரிக்கும் சனாதானம் ஒழிக்கப்பட வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |