செங்கிப்பட்டியில் உதயநிதி ஸ்டாலினிடம் விசாரணை - காவல்நிலையம் முன்பு குவிந்த தொண்டர்கள்
செங்கிப்பட்டி காவல்நிலையத்தில் வைத்து உதயநிதி ஸ்டாலினிடம் காவல்துறையினர் விசாரித்து வரும் நிலையில், ஏராளமான திமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர்.
செங்கிப்பட்டியில் உதயநிதி ஸ்டாலினிடம் விசாரணை
தஞ்சாவூரில் திமுக சார்பில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், நடிகை திரிஷா குறித்து இரட்டை அர்த்தத்தில் பேசியதாக உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர், இன்று சென்னையில் உள்ள அவரது வீட்டில் வைத்து அவரை கைது செய்துள்ளனர்.

உதயநிதி ஸ்டாலினை விசாரணைக்குப் பின் இன்றே விடுவிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
விசாரணைக்காக உதயநிதி ஸ்டாலினை காவல்துறையினர் தஞ்சாவூர் அழைத்து சென்ற நிலையில், இந்த கைதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
உதயநிதி ஸ்டாலின் அழைத்து வரப்படுவதாக இருந்த தஞ்சாவூர் தெற்கு காவல்நிலையத்தை சுற்றி 1000க்கும் மேற்பட்ட திமுகவினர் குவிந்தததால், 5 மாவட்ட எஸ்.பிக்கள் வரவழைக்கப்பட்டடு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
ஆனால், அங்கு கொண்ட செல்லப்படுவதற்கு பதிலாக உதயநிதி ஸ்டாலினை செங்கிப்பட்டி காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
இதனால் சுமார் 20 நிமிடங்களுக்கு காவல் வாகனத்தில் இருந்து இறங்க மறுத்த உதயநிதி ஸ்டாலின், பின்னர் வாகனத்திலிருந்து இறங்கி அங்குள்ள தொண்டர்களை நோக்கி கையசைத்து, காவல்நிலையத்தின் உள்ளே சென்றார்.

தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் வைத்து உதயநிதி ஸ்டாலினிடம் விசாரணை நடத்தி வருகிறார்.
இதனையடுத்து செங்கிப்பட்டி காவல்நிலையம் முன்பும் ஏராளமான திமுக தொண்டர்கள் குவிந்துள்ள நிலையில், தொண்டர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |