பாகிஸ்தான் வீரர்கள் முன்பு ஜெய் ஶ்ரீராம் என கூச்சலிட்ட இந்திய ரசிகர்கள்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்
இந்தியா-பாகிஸ்தான் இடையிலான நேற்றைய உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தான் வீரர்களுக்கு எதிராக இந்திய ரசிகர்கள் கோஷம் எழுப்பியதற்கு தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்திய ரசிகர்கள் கோஷம்
நேற்று குஜராத்தின் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.
இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
இந்த போட்டியின் போது, பாகிஸ்தான் வீரர்கள் பாபர் ஆஸம் மற்றும் ரிஸ்வான் ஆகியோர் விக்கெட்டை பறிகொடுத்து பெவிலியன் திரும்பும் போது அவர்களை நோக்கி இந்திய ரசிகர்கள் ஜெய் ஶ்ரீ ராம் என கோஷமிட்டனர்.
இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி பலரும் தங்களது விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் போட்டிக்கு முன்னதாக நாணய சுழற்சியில் வெற்றி பெற்று பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் பேசிய போது, இந்திய ரசிகர்கள் அவரை பேச விடாமல் கோஷம் எழுப்பி தொந்தரவு செய்தனர்.
உதயநிதி ஸ்டாலின் கண்டனம்
இந்நிலையில் இந்திய ரசிகர்கள் பாகிஸ்தான் வீரர்களிடம் நடந்து கொண்ட விதம் குறித்து தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதில், விளையாட்டு என்பது இரு நாடுகளையும் இணைக்கும் சக்தியாக இருக்க வேண்டும், இந்தியாவை பொறுத்தவரை அதன் விளையாட்டு திறன் மற்றும் விருந்தோம்பல் பண்பிற்கு புகழ்பெற்றது.
India is renowned for its sportsmanship and hospitality. However, the treatment meted out to Pakistan players at Narendra Modi Stadium in Ahmedabad is unacceptable and a new low. Sports should be a unifying force between countries, fostering true brotherhood. Using it as a tool… pic.twitter.com/MJnPJsERyK
— Udhay (@Udhaystalin) October 14, 2023
இருப்பினும் நேற்று குஜராத்தின் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் பாகிஸ்தான் வீரர்கள் நடத்தப்பட்ட விதம் ஏற்றுக் கொள்ள முடியாதது மற்றும் இந்தியாவுக்கு புதிய தாழ்வு என்று குறிப்பிட்டார்.
விளையாட்டு நாடுகளை இணைப்பதாக இருக்க வேண்டும், உண்மையான சகோதரத்துவத்தை வளர்க்கக் கூடியதாக இருக்க வேண்டும், வெறுப்பை பரப்பும் கருவியாக பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது என தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |