Instant Dosa: மொறுமொறு உடுப்பி தக்காளி தோசை.., 10 நிமிடத்தில் செய்யலாம்
பல குடும்பத்தின் காலை உணவில் பெரும்பாலும் தோசை, இட்லி போன்ற உணவை அதிகளவில் எடுத்துக்கொள்வார்கள்.
தோசைக்கு மா அரைத்து அதனை புளிக்கவைத்து செய்வதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும்.
அந்தவகையில், மா அரைக்காமலேயே 10 நிமிடத்தில் உடனடி மொறுமொறு உடுப்பி தக்காளி தோசை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- சின்னவெங்காயம்- 6
- தக்காளி- 2
- பூண்டு- 4 பல்
- கோதுமை மா- ¼ கப்
- அரிசி மா- 1 கப்
- ரவை- ½ கப்
- மிளகாய் தூள்- 1 ஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் சின்னவெங்காயம், தக்காளி, பூண்டு, கோதுமை மா, அரிசி மா, ரவை, மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்.
பின் இதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலந்துகொள்ளவும்.
அடுத்து அடுப்பில் தோசை தவா வைத்து சூடானதும் மெலிதாக ஊற்றி எடுத்தால் சுவையான உடுப்பி தக்காளி தோசை தயார்.
இந்த தோசை தேங்காய் சட்னி, சாம்பார் என அனைத்திற்கு தொட்டு சாப்பிட சுவையாக இருக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |