சிக்ஸர் மழைபொழிந்த உகாண்டா வீரர்! நொறுங்கிய கென்யா அணி
Olipa Gerald 95 runs vs kenya: கென்யா அணிக்கு எதிரான டி20 போட்டியில் உகாண்டா 47 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆப்பிரிக்க கண்ட கிண்ணப் போட்டியில் உகாண்டா அணி 47 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கென்யாவை வீழ்த்தியது.
ஒலிபா ஜெரால்ட்
உகாண்டா மற்றும் கென்யா அணிகளுக்கு இடையிலான ஆப்பிரிக்க கண்ட கிண்ண டி20 போட்டி கிகாலி சிட்டியில் நடந்தது.
முதலில் ஆடிய உகாண்டா அணியில் சரவெடி ஆட்டம் ஆடிய ஒலிபா ஜெரால்ட் (Olipa Gerald), 52 பந்துகளில் 8 சிக்ஸர்கள் மற்றும் 6 பவுண்டரிகளுடன் 95 ஓட்டங்கள் விளாசினார்.
அணித்தலைவர் ரியாஸத் அலி ஷா 19 பந்துகளில் 32 ஓட்டங்கள் விளாச, உகாண்டா அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 197 ஓட்டங்கள் குவித்தது.
உகாண்டா வெற்றி
பின்னர் ஆடிய கென்யா 19 ஓவர்களில் 150 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆக, உகாண்டா அணி 47 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
கென்யா அணியில் அதிகபட்சமாக ராகேப் பட்டேல் 33 ஓட்டங்களும், சச்சின் கில் 22 ஓட்டங்களும் எடுத்தனர்.
ஜுமா மியாகி மற்றும் எனோக் காசைஜா தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். மியூசிங்யுசி மற்றும் பகுமா தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
