வரலாற்றில் முதல் முறையாக உலககோப்பைக்கு தகுதி பெற்ற ஆப்பிரிக்க அணி
உகாண்டா கிரிக்கெட் அணி டி20 உலகக்கோப்பை தொடருக்கு தகுதிபெற்று சாதனை படைத்துள்ளது.
டி20 உலகக்கோப்பை
மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் அடுத்த ஆண்டு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது.
மொத்தம் 20 அணிகள் விளையாட உள்ள இந்த தொடரில் டாப் 8 அணிகளை தவிர்த்து, மீதமுள்ள 12 அணிகளை தெரிவு செய்ய தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
ஆப்பிரிக்கா பிராந்தியத்தில் இருந்து நமீபியா மற்றும் உகாண்டா அணிகள் தகுதி பெற்றுள்ளன. இதில் உகாண்டா அணி முதல் முறையாக டி20 உலகக்கோப்பைக்கு தகுதிபெற்று வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.
அதேநேரத்தில் ஜிம்பாப்பே அணி மூன்றாவது இடத்தையே பிடித்ததால் அதிர்ச்சிகரமாக உலகக்கோப்பைக்கு தகுதி பெற தவறியது.
Twitter/Uganda Cricket Association
2024 டி20 உலகக்கோப்பைக்கு உறுதி செய்யப்பட்ட அணிகள்:
- மேற்கிந்திய தீவுகள்
- அமெரிக்கா
- அவுஸ்திரேலியா
- இங்கிலாந்து
- இந்தியா
- நியூசிலாந்து
- நெதர்லாந்து
- பாகிஸ்தான்
- தென் ஆப்பிரிக்கா
- இலங்கை
- ஆப்கானிஸ்தான்
- வங்கதேசம்
- அயர்லாந்து
- ஸ்கொட்லாந்து
- பப்புவா நியூ கினியா
- கனடா
- நேபாளம்
- ஓமன்
- நமீபியா
- உகாண்டா
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |