பிரித்தானியாவில் மர்மமாக கொலை செய்யப்பட்ட 10 வயது சிறுமி: வெளிநாட்டிற்கு சென்ற 3 சந்தேக நபர்கள்
பிரித்தானியாவில் 10 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் தேடப்படும் மூன்று நபர்கள் வெளிநாட்டிற்கு சென்று விட்டதாக பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.
10 வயது சிறுமி கொலை
பிரித்தானியாவில் சர்ரே-வுக்கு அருகே ஹெர்ஷெல்(Horsell) கிராமத்தில் உள்ள சொத்து ஒன்றில் 10 வயது சிறுமி ஒருவர் கொலை செய்யப்பட்டு இருப்பது வியாழக்கிழமை பொலிஸ் அதிகாரிகளின் பாதுகாப்பு எச்சரிக்கைக்கு பிறகு கண்டறியப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து 10 வயது சிறுமியின் குடும்பத்தினருக்கு சிறப்பு பயிற்சி பெற்ற அதிகாரிகள் ஆதரவு வழங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டது.
Sky News
மேலும் இந்த அதிர்ச்சி தரும் சம்பவம் எப்படி நிகழ்ந்தது என்பதை பற்றிய தோற்றத்தை உருவாக்க துப்பறியும் அதிகாரிகள் முயற்சித்து வருவதாக மூத்த தலைமை காவலர் டெபி வைட் நேற்று குறிப்பிட்டு இருந்தார்.
நாட்டை விட்டு வெளியேறிய நபர்கள்
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக நாங்கள் விசாரிக்க நினைத்த மூன்று பேர் நாட்டை விட்டு புதன்கிழமை வெளியேறிவிட்டதாக சர்ரே பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Sky News
இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட குழந்தையின் பெற்றோரிடமும், வெளிநாட்டு சென்ற அந்த 3 பேரின் இருப்பிடத்தை கண்டறிய சர்வதேச அதிகாரிகளுடன் பேசி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் சிறுமி கொலை வழக்கு தொடர்பாக பலதரப்பட்ட விசாரணைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.