பிரித்தானியாவின் அதிக வயதான மனிதர்: 111வது பிறந்தநாளில் பகிர்ந்து கொண்ட ரகசியம்
பிரித்தானியாவை சேர்ந்த 111 வயதுடைய மனிதர் தன்னுடைய நீண்ட நாள் வாழ்விற்கான ரகசியத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
111 வயது முதியவர்
கடந்த ஆகஸ்ட் 26ம் திகதி பிரித்தானியரான ஜான் டின்னிஸ்வுட் தன்னுடைய 111வது பிறந்தநாளை கொண்டாடினார்.
1912ம் ஆண்டு லிவர்பூல் என்னும் இடத்தில் பிறந்த இவர் பிரித்தானியாவின் அதிக வயதான மனிதர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
John tinniswood
தன்னுடைய 111வது பிறந்தநாளின் போது பிரித்தானிய மன்னர் ர் மூன்றாம் சார்லஸ் மற்றும் ராணி கமிலியாவிடமிருந்தும் வாழ்த்து அட்டைகளையும் பெற்றுள்ளார்.
111வது பிறந்தநாளில் தன்னுடைய நீண்ட வாழ்க்கை பயணம் குறித்து பேசிய ஜான் டின்னிஸ்வுட், 110 வயது வரை வாழ்வதில் எந்தவொரு வித்தியாசமும் இல்லை, அதிலும் கடந்த 10 முதல் 15 ஆண்டு கால வாழ்க்கையில் எனக்கு எந்தவொரு வித்தியாசமும் தெரியவில்லை என தெரிவித்துள்ளார்.
நீண்ட வாழ்விற்கான ரகசியம்
இதற்கிடையில் அவருடைய இந்த நீண்ட வாழ்க்கை பயணத்திற்கான ரகசியம் என்னவென்று கேட்டதற்கு, எதிலும் அளவாக இருப்பது என்று தெரிவித்துள்ளார்.
வாழ்க்கையில் உள்ள அனைத்து விஷயங்களிலும் அளவாக இருக்க வேண்டும், படிப்பது, சாப்பிடுவது, வாக்கிங் செல்வது என அனைத்திலும் அளவாக இருக்க வேண்டும்.
John tinniswood
மேலும் தேவையான உடற்பயிற்சியும் மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |