பிரித்தானியாவில் 3 நாட்களாக தேடப்படும் சிறுமி: நீடிக்கும் மர்மம்., புகைப்படம் வெளியிட்ட பொலிஸார்
பிரித்தானியாவில் 14 வயது பள்ளி சிறுமி ஒருவர் கடந்த 3 நாட்களாக காணாமல் போயுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தில் லெய்செஸ்டர்ஷையரில் உள்ள ஏர்ல் ஷில்டனில், கடந்த நவம்பர் 3-ஆம் திகதி இரவு மெக்கென்சி டெய்லர் (McKenzie Taylor) எனும் 14 வயது சிறுமி மாயமானார்.
இது குறித்த தகவல் தெரியவந்ததையடுத்து, கடந்த மூன்று நாட்களாக பள்ளி மாணவியை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்நிலையில் சிறுமியின் புகைப்படம் மற்றும் அடையாள விவரங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
கடைசியாக புதன்கிழமை இரவு லீசெஸ்டர்ஷையரின் ஏர்ல் ஷில்டன் (Earl Shilton, Leicestershire) பகுதியில் காணப்பட்ட மெக்கென்சி டெய்லர், மினி மவுஸ் லோகோவுடன் கருப்பு நிற கத்தரிக்கப்பட்ட டி-ஷர்ட்டை அணிந்திருந்தார்.
மேலும், அவள் கருப்பு லெக்கின்ஸ் அணிந்திருந்தார், அதில் 'கால்வின்' என்று எழுதப்பட்டிருக்கும் எனறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Photo: Leicestershire Police /SWNS
மெக்கென்சி மெல்லிய உடலமைப்புடன் மற்றும் கருப்பு முடி மற்றும் பழுப்பு நிற கண்களுடன் சுமார் 5 அடி 5 அங்குல உயரம் கொண்டவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லீசெஸ்ட்ஷயர் காவல்துறை செய்தித் தொடர்பாளர் கூறிஎதாவது: 'அதிகாரிகள் மெக்கென்சி டெய்லரின் பாதுகாப்பு மற்றும் நலனில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளனர். அவரை கண்டறிவதற்கான விசாரணைகள் நடந்து வருகின்றன, மேலும் மெக்கென்சியின் இருப்பிடம் தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் பொலிஸைத் தொடர்பு கொள்ளுமாறு அதிகாரிகள் இப்போது வேண்டுகோள் விடுத்துள்ளனர்" என கூறினார்.
இதற்கிடையில், மெக்கென்சி லீசெஸ்டர்ஷயர் பகுதிக்கு வெளியே பயணம் செய்திருக்கலாம் என தகவல் கிடைத்துள்ளது.
மெக்கென்சியின் இருப்பிடம் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் அல்லது அவரைப் பார்க்கும் எவரும், 'நவம்பர் 3 அன்று நடந்த 653 சம்பவம்' என மேற்கோள் காட்டி 101 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது