பிரித்தானியாவில் குத்திக் கொல்லப்பட்ட 18 வயது சிறுவன்: பாதிக்கப்பட்டவரின் பெயரை வெளியிட்ட பொலிஸார்
பிரித்தானியாவின் லீட்ஸில் 18 வயது இளைஞன் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட நிலையில், பொலிஸார் இளைஞனின் பெயரை ஜேமி மீஹ் என்று தெரிவித்துள்ளனர்.
18 வயது இளைஞனுக்கு கத்தி குத்து
பிரித்தானியாவின் ஆர்ம்லி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் 18 வயது இளைஞர் மற்றும் 16 வயது சிறுவன் ஆகிய இருவர் கத்தியால் குத்தப்பட்டு பயங்கரமாக தாக்கப்பட்டனர்.
இதில் 18 வயது இளைஞர் ஜேமி மீஹ் (Jamie Meah) மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
சிறுவர்கள் இருவரும் ஹால் லேன் மற்றும் ப்ரென்ட்வுட் டெரஸ் சந்திப்பு தெருவில் "கூர்மையான ஆயுதங்களால்" தாக்கப்படுவதற்கு முன்பு டாக்ஸியில் சென்றதாக மேற்கு யார்க்ஷயர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
18 வயது இளைஞன் உயிரிழந்துள்ள நிலையில், 16 வயது சிறுவன் கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் உள்ளார்.
30 வயதுடைய நபர் கைது
இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக பொலிஸார் நடத்திய விசாரணையில், 30 வயதுடைய நபர் கொலை சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆனால் விசாரணை தொடர்ந்து நிலுவையில் இருந்ததால், அவர் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இதற்கிடையில், தாக்குதல் அல்லது காட்சிகள் பற்றிய தகவல் உள்ளவர்கள் எங்களைத் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
மேலும் இதுவரை தகவல்களுடன் முன்வந்த குடியிருப்பாளர்களுக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.