பிரித்தானிய சிறையில் கைதிகளுடன் பாலியல் உறவில் ஈடுபட்ட பெண் காவலர்கள்: 18 பேர் பணி நீக்கம்
கைதிகளுடன் பாலியல் உறவு கொண்டதற்காக பிரித்தானியாவின் மிகப்பெரிய சிறையை சேர்ந்த 18 பெண் காவலர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கைதிகளுடன் பாலியல் உறவு
பிரித்தானியாவின் எச்எம்பி பெர்வினில்(HMP berwyn) உள்ள சிறையில் கைதிகளுடன் பெண் காவல் அதிகாரிகள் பாலியல் உறவு கொண்டதாக எழுந்த குற்றச்சாட்டு மற்றும் வெளியான புகைப்படங்களை தொடர்ந்து 18 பெண் அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டனர் அல்லது ராஜினாமா செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.
பிரித்தானியா மற்றும் வேல்ஸின் மிகப்பெரிய சிறையான எச்எம்பி பெர்வினில், கைதிகளுடன் பெண் காவல் அதிகாரிகள் சிலர் நெருக்கமான உறவில் இருந்ததாக கூறப்படுகிறது.
Mersyside police/Cascade News/Twitter
மேலும் அவர்களில் சிலர் கைதிகளுக்கு வெளிப்படையான புகைப்படங்களை அனுப்புவது, சிறை அறைகளில் பாலியல் உறவு கொள்வது மற்றும் சில மோசமான தொலைபேசி அழைப்புகளை கைதிகளுடன் பரிமாறிக் கொள்வது ஆகிய நடவடிக்கையால் பிடிபட்டுள்ளனர்.
இதையடுத்து மூன்று காவலர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர், மேலும் சிலர் ராஜினாமா செய்துள்ளனர், சிலர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
North Wales Police
பொறுத்துக் கொள்ள மாட்டோம்
இந்நிலையில் சிறைச்சாலையின் செய்தி தொடர்பாளர் வழங்கிய தகவலில், எங்கள் முன்னணி அதிகாரிகள் என்றும் ஹீரோக்களுக்கு குறைவானவர்கள் அல்ல, ஆனால் அவர்களின் சொந்த நலனுக்காக அவர்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்று நினைக்கும் சில அதிகாரிகளை நாங்கள் ஒருபோதும் பொறுத்துக் கொள்ள மாட்டோம் என்று தெரிவித்துள்ளார்.
ரெக்ஸ்ஹாமில் அமைந்துள்ள HMP berwyn சிறைச்சாலை பிரித்தானியாவின் குஷிஸ்ட் சிறைச்சாலை(cushiest prison) என அழைக்கப்படுகிறது.
getty

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.