30 ஆண்டுகளுக்கு பிறகு., ஆசிரியர் கொலை குறித்த தகவலுக்கு £20,000 பரிசுத் தொகை
30 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலை சம்பவத்தை கண்டறிய பொலிஸார் மீண்டும் தீவிர முயற்சியில் ஈடுபட தொடங்கியுள்ளனர்.
ஜாய் ஹெவர் கொலை
1995ம் ஆண்டு அக்டோபர் 17ம் திகதி 52 வயதான ஓய்வு பெற்ற ஆரம்பப் பள்ளி ஆசிரியர் ஜாய் ஹெவர் லண்டன் வால்தாம்ஸ்டோவ் பகுதியில் உள்ள அவரது வீட்டில் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார்.
இந்த வன்முறை சம்பவம் அரங்கேறி 30 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் கொலையாளியை மீண்டும் கண்டுபிடிக்க மெட் பொலிஸார் தீவிர விசாரணையை கையில் எடுத்துள்ளனர்.
இதற்காக விசாரணை அதிகாரிகள் நவீன தடயவியல் முறைகள் மற்றும் டிஎன்ஏ தொழில்நுட்பம் ஆகியவற்றை பயன்படுத்த உள்ளனர்.
பரிசுத் தொகை அறிவிப்பு
அத்துடன் கொலையாளி தொடர்பான தகவல் அளிப்பவர்களுக்கு சுமார் £20,000(20 லட்சம்) பரிசுத் தொகையானது அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த மோசமான வன்முறையை நடத்திய கொலையாளியை கண்டுபிடித்து நீதியை நிலைநாட்ட வேண்டும் என்று பொலிஸார் உறுதியளித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |