பிரித்தானியாவில் காணாமல் போன பெண் சடலமாக கண்டுபிடிப்பு: 20 வயது இளைஞர் கைது
பிரித்தானியாவின் கென்ட் பகுதியில் காணாமல் போன 54 வயதுடைய பெண்ணின் உடல் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கண்டெடுக்கப்பட்ட 54 வயதுடைய பெண்ணின் உடல்
பிரித்தானியாவில் காணாமல் போன 54 வயதுடைய கிளாரி நைட்ஸ் என்ற பெண்ணை பொலிஸார் தேடி வந்த நிலையில், அவர் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
கேன்டர்பரிக்கு அருகிலுள்ள அப்ஸ்ட்ரீட் பகுதியை சேர்ந்த கிளாரி நைட்ஸ் என்ற பெண் கிராமத்தில் கடைசியாக ஆகஸ்ட் 23 திகதி பார்க்கப்பட்டுள்ளார்.
அதன்பின் அவருடைய சில்வர் நிற சுசுகி காரை வேட்-இன்(Wade) மற்றொரு கிராமமான செயின்ட் நிக்கோலஸ் என்ற இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
Claire Knights
அங்கிருந்து அவர் மின்னிஸ் பே-பகுதிக்கு அன்று மதியம் நடந்து சென்றது கடைசியாக பார்க்கப்பட்டுள்ளது.
அப்போது அவருடன் செபுலோன் என்ற காபி மற்றும் வெள்ளை நிற ஸ்பானியல் நாய் இருந்ததாக தெரியவந்துள்ளது. செபுலோன் என்ற ஸ்பானியல் நாய் பின் மின்னிஸ் பே பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது, அத்துடன் காணாமல் போன 54 வயதுடைய கிளாரி நைட்ஸின் உடலும் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இவரது மரணம் மர்மமானது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர், மேலும் மரணம் குறித்த விசாரணையை தொடங்கியுள்ளனர்.
Claire Knights's dog, Zebulon
இளைஞர் கைது
இந்நிலையில் கிளாரி நைட்ஸின் மரணத்தில் சந்தேகத்தின் பேரில் மார்கேட் பகுதியை சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் ஆகஸ்ட் 24ம் திகதி வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |