ஈரானின் அணுசக்தி திட்டம்: 71 புதிய தடைகளை அறிவித்த பிரித்தானியா
பிரித்தானிய அரசு ஈரானின் அணுசக்தி திட்டத்துடன் தொடர்புடைய 71 புதிய தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களை தடை பட்டியலில் சேர்த்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மாற்றும் ஐரோப்பிய ஒன்றியம் மேற்கொண்ட அணுசக்தி தடைகளின் தொடர்ச்சியாக பிரித்தானியா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் ஜேர்மணி ஆகிய நாடுகள், 2015-ல் ஈரானுடன் கையெழுத்தான அணுசக்தி ஒப்பந்தத்தை மீறியதாக குற்றம்சாட்டி, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தடைகளை மீண்டும் கொண்டு வந்துள்ளன.
ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்கும் நோக்கம் இல்லை என மறுத்தாலும், பிரித்தானிய அரசு, "அணுசக்தி பரவலை கட்டுப்படுத்த" இந்த புதிய நடவடிக்கையை எடுத்துள்ளது.
புதிய தடைகள் ஈரானின் முக்கிய அணுசக்தி அதிகரைகள், நிதி மற்றும் எரிசக்தி நிறுவனங்களை உள்ளடக்கியவை.
இவர்கள் மீது சொத்து முடக்கம், நிதி வரையறைகள் மற்றும் பயணத்தடைகள் விதிக்கப்படும்.
இந்த புதிய தடைகள், ஈரானின் அணுசக்தி திட்டத்தை சர்வதேச அளவில் கட்டுப்படுத்தும் முயற்சியாகவும், பிரித்தானியா தனது வெளிநாட்டு கொள்கையில் உறுதியான நிலைப்பாட்டை எடுத்துள்ளதையும் காட்டுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
UK Sanctions on Iran, UK Iran Sanctions, Iran Nuclear programme