சிறுபடகுகளைக் கட்டுப்படுத்த பிரான்ஸ் அதிகாரிகளால் முடியவில்லை: பிரித்தானியா குற்றச்சாட்டு
பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்குள் நுழைய புலம்பெயர்ந்தோர் பயன்படுத்தும் சிறுபடகுகளைக் கட்டுப்படுத்த பிரான்ஸ் அதிகாரிகளால் முடியவில்லை என பிரித்தானியா குற்றம் சாட்டியுள்ளது.
சட்டத்தை மாற்றுவதாக உறுதியளித்த பிரான்ஸ்
பிரான்சிலிருந்து பிரித்தானியா நோக்கிப் புறப்படும் புலம்பெயர்ந்தோர் படகுகளை, இனி பிரான்ஸ் அதிகாரிகள் கடலுக்குள் இறங்கி தடுக்கும் வகையில் சட்ட மாற்றம் செய்யப்படும் என ஜூன் மாதத்தில் பிரான்ஸ் உறுதியளித்திருந்தது.
அதனால் உண்மையாகவே நல்ல பலன் இருக்கும் என்பதால் பிரித்தானியா தரப்பும் பிரான்சின் முடிவுக்கு மகிழ்ச்சி தெரிவித்திருந்தது.
பிரித்தானியா குற்றச்சாட்டு
ஆனால், அந்த சட்ட மாற்றத்தை பிரான்ஸ் இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை என்றும், பிரான்ஸ் அதிகாரிகளால் சிறுபடகுகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் பிரித்தானிய எல்லைப் பாதுகாப்புப் படைத் தலைவரான மார்ட்டின் ஹெவிட் (Martin Hewitt) குற்றம் சாட்டியுள்ளார்.
விடயம் என்னவென்றால், பிரான்ஸ் பிரதமரின் பதவி எப்போது கவிழும் என்னும் ஒரு நிலை பிரான்சில் காணப்படுகிறது.
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் பதவி விலகவேண்டும் என குரல்கள் வலுத்துவருகின்றன.
தங்கள் பதவியைத் தக்கவைத்துக்கொள்ள பிரான்ஸ் தலைவர்கள் போராடிக்கொண்டிருக்கும் நிலையில், பிரித்தானியாவை பாதிக்கும் புலம்பெயர்தல் குறித்து கவலைப்பட அவர்களுக்கு எங்கே நேரம் இருக்கும்?
ஆக, பிரான்சில் நிலவும் அரசியல் நிலையற்றதன்மை, சட்டவிரோத புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த பிரித்தானியா எடுத்துவரும் முயற்சிகளுக்கு இடையூறாக உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |