மூன்றாம் உலகப்போர் தொடர்பில் பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல்
மூன்றாம் உலகப்போர் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என்னும் ஒரு நிலை உருவாகியுள்ளது. பல நாடுகள் அமைதியாக போரை எதிர்கொள்ளத் தயாராகிவருகின்றன.
இந்நிலையில், மூன்றாம் உலகப்போர் வெடிக்கும் நிலையில், அதை எதிர்கொள்ளத் தயாராக இருக்குமாறு பிரித்தானிய அமைச்சர்கள் மக்களுக்கு ஆலோசனைகள் கூறிவருகிறார்கள்.
இந்த உணவுகளை வாங்கிவைத்துக்கொள்ளுங்கள்...
அவ்வகையில், ஃப்ரிட்ஜில் வைக்காவிட்டாலும் நீண்ட நாட்களுக்கு கெட்டுப்போகாமல் இருக்கக்கூடிய ‘non-perishable foods’ என்னும் வகை உணவுகளை வாங்கி வைத்துக்கொள்ளுமாறு மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
சிறிய கேன்களில் அடைக்கப்பட்டுள்ள tinned foods வகை உணவுகளையும், அந்த கேன்களை திறக்க உதவும் உபகரணத்தையும் வாங்கிவைத்துக்கொள்ளுமாறு மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
இந்த வகை உணவுகளை சமைக்கத் தேவையில்லை, மின்சாரம் இல்லாவிட்டால் கூட, மைக்ரோவேவ் அவனில் வைத்து சூடுபண்ணாமலே இந்த உணவுகளை உண்ணலாம். உடனடியாக உண்ணும் வகையிலான மாமிசம், பழங்கள், காய்கறிகள் ஆகியவை இந்த உணவுகளில் அடங்கும்.
ஆகவே, மக்கள் தங்களுக்காக இந்த உணவுகளையும், தங்கள் செல்லப்பிராணிகளுக்கான உணவுகளையும் வாங்கிவைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
மேலும், அவசரத் தேவைகளுக்காக, பேட்டரியில் இயங்கும் டார்ச், ரேடியோ, மொபைலை சார்ஜ் செய்ய பவர் பேங்க், உபரி பேட்டரிகள், கொதிக்கவைத்த நீர், குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கான அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுமாறும் மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.
அத்துடன், ஏதாவது ஆபத்து ஏற்பட்டால், உடனடியாக வீட்டை விட்டு வெளியேறும் வகையில், அத்தியாவசிய பொருட்களை ஒரு பையில் போட்டு எப்போதும் தயாராக வைத்துக்கொள்ளுமாறும் பிரித்தானியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |