இலங்கைக்கு பயணம் செய்ய வேண்டாம்! பிரித்தானியர்களுக்கு அரசு அறிவுறுத்தில்
தற்போது நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் இலங்கைக்கு பயணம் செய்வதை தவிர்க்க பிரித்தானிய அரசு தனது குடிமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கைக்கான அத்தியாவசியப் பயணத்தைத் தவிர மற்ற அனைத்து பயணங்களையும் தவிர்க்குமாறு பிரித்தானிய வெளியுறவு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகம் (FCDO) அறிவுறுத்தியுள்ளது.
இந்த அறிவுரை இலங்கையின் சர்வதேச விமான நிலையத்தின் வழியாக விமானப் போக்குவரத்துக்கு பொருந்தாது என்றும் FCDO கூறியுள்ளது.
மேலும் FCDO அதன் அறிக்கையில், பிரித்தானியர்கள் யாரேனும் இந்த நேரத்தில் இலங்கையில் இருந்தால் அல்லது இலங்கைக்கு பயணிக்கும் எண்ணத்தில் இருந்தால், அங்கு நடக்கும் அனைத்து ஆர்ப்பாட்டங்களையும் தவிர்க்க வேண்டும் மற்றும் உள்ளூர் அதிகாரிகளின் ஆலோசனையைப் பின்பற்ற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டு, நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையிலேயே இது இடம்பெற்றுள்ளது. மே 9-ஆம் திகதி கொழும்பில் காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிரான வன்முறைகள் உட்பட பல சம்பவங்கள் இடம்பெற்றன, இதன் விளைவாக பலர் கொல்லப்பட்டனர்.
இலங்கையில் "31 மார்ச் 2022 முதல் பல போராட்டங்கள் நடந்துள்ளன. மேலும் போராட்டங்கள் நாடு முழுவதும் நடைபெற வாய்ப்புள்ளது. இதன் காரணமாக இலங்கை அரசாங்கம் குறுகிய அறிவிப்பில் உள்ளூர் கட்டுப்பாடுகளை விதிக்கலாம். நீங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும், ஆர்ப்பாட்டங்கள் அல்லது பெரிய கூட்டங்களை தவிர்க்கவும். உள்ளூர் அதிகாரிகளின் ஆலோசனையைப் பின்பற்றுங்கள்" என்று பிரித்தானிய ஆலோசனை கூறியது.
இறக்குமதிக்கு செலுத்துவதற்கு கடும் பணத் தட்டுப்பாடு காரணமாக மருந்துகள், சமையல் எரிவாயு, எரிபொருள் மற்றும் உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளின் பற்றாக்குறையுடன் இலங்கையில் பொருளாதார நிலைமை மோசமடைந்து வருகின்றது.
கடைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகள், எரிபொருள் நிலையங்கள் மற்றும் மருந்தகங்களில் நீண்ட வரிசைகள் இருக்கின்றன. மின் விநியோகம் காரணமாக தினசரி மின்வெட்டு தொடர்கிறது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
மரண அறிவித்தல்
திரு கிருஸ்ணமூர்த்தி கதிர்காமு
புங்குடுதீவு 10ம் வட்டாரம், Ratingen, Germany, Toronto, Canada, Zürich, Switzerland
23 May, 2022
மரண அறிவித்தல்
திரு நாராயனர் இராசரத்தினம்
ஏழாலை, யாழ்ப்பாணம், திருகோணமலை, கொழும்பு, Sokoto, Nigeria, London, United Kingdom
22 May, 2022
நன்றி நவிலல்
திரு மாணிக்கம் இரவீந்திரகுமார்
அளவெட்டி, ஜேர்மனி, Germany, சுவிஸ், Switzerland, London, United Kingdom, போரூர், India, Toronto, Canada
24 Apr, 2022
மரண அறிவித்தல்
திருமதி பஞ்சாட்சரதேவி அருமைத்துரை
சரவணை, யாழ்ப்பாணம், ஹல்துமுல்ல, London, United Kingdom
18 May, 2022
மரண அறிவித்தல்
திரு இரத்தினசாமி ஜெயராசா
Vaddukoddai, கொடிகாமம், Gelsenkirchen, Germany, Langelsheim, Germany
14 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி நாகராசா தனலெட்சுமி
Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு 11ம் வட்டாரம், Toronto, Canada, Brampton, Canada, யாழ்ப்பாணம்
20 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி ருக்குமணி வரதராசா
சுழிபுரம் மேற்கு, லியோன், France, Bobigny, France, London, United Kingdom, அமெரிக்கா, United States
20 May, 2022