இந்த வார்த்தையைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்! பிரித்தானியா அரசு அறிவுறுத்தல்
பிரெக்சிட் என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதற்கு எதிராக பிரித்தானியா அரசு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
2020ல் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிந்தது, பிரித்தானியா பிரிந்த நிகழ்வை பொதுவாக ‘பிரெக்சிட்’ என அழைக்கப்படுகிறது.
இந்நிலையில் 31 டிசம்பர் 2020 நிகழ்வுகளைக் குறிப்பிடும் போது அதிகாரிகள் ‘பிரெக்சிட்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும், அதற்குப் பதிலாக முடிந்தவரை திகதியைக் பயன்படுத்துமாறு பிரித்தானியா அரசாங்கம் பரிந்துரைத்துள்ளது.
வரலாற்று நிகழ்வை குறிப்பிடும் போது நீங்கள் 'பிரெக்சிட்' என்ற வார்த்தையைப் பயன்படுத்தலாம், ஆனால் முடிந்தவரை குறிப்பிட்ட திகதிகளைப் பயன்படுத்துவது நல்லது என்று அரசாங்கத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட style guide-ல் தெரிவிக்கப்பட்டள்ளது.
உதாரணமாக, 'பிரெக்சிட்' அல்லது ‘பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிது’ என்பதற்குப் பதிலாக, ‘31 டிசம்பவர் 2020' என்பதைப் பயன்படுத்தவும் என அரசு குறிப்பிட்டுள்ளது.