பிரித்தானியாவில் ஆப்கானியர்களின் தற்போதைய நிலை: பெரும் குழப்பத்தில் 15,000 நபர்கள்!
பிரித்தானியாவில் குடியேறிய 15,000 ஆப்கானிஸ்தானியர்களின் விசா வரும் பிப்ரவரி 26 உடன் காலாவதி ஆக நிலையில் மக்கள் தங்கள் நிலை குறித்து அச்சத்தில் இருப்பதாக வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்கு பிறகு சுமார் 15,000 நபர்கள் பிரித்தானியாவில் தற்காலிக விசா வழங்கப்பட்டு பிரித்தானியாவில் குடியமர்த்தப்பட்டனர்.
அவர்களுக்கு தற்காலிக விசா நிறைவடைவதற்குள் புதிய நிரந்தர விசா அளிக்கப்படும் என்ற வாக்குறுதியும் அளிக்கப்பட்டது.
ஆனால் வரும் பிப்ரவரி 26ம் திகதியுடன் ஆப்கானியர்களின் தற்காலிக விசா முடிவடையள்ளது.
ஆப்கானிஸ்தானியர்களுக்கு இதுவரை வாய் வார்த்தையாக மட்டுமே அதிகாரிகள் வாக்குறுதி அளித்து வருவதால் அவர்கள் தங்கள் நிலை குறித்து கவலையும் குழப்பமும் அடைத்துள்ளனர்.
இந்த நிலையில் இதுகுறித்து வழக்கறிஞர்கள், பிரித்தானிய அமைச்சருக்கு மனு ஒன்றை அளித்துள்ளனர்.
அதில் வழக்கறிஞர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்ட சங்கத்தில் உள்ள வழக்கறிஞர்களுக்கு பல பகுதிகளில் உள்ள ஆப்கானிஸ்தானியர்களிடம் அழைப்புகள் வருவதாகவும், அவர்கள் தங்கள் விசா குறித்த அச்சத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் இருந்து குடியமர்த்தப்பட்ட பல நபர்களுக்கு நிரந்தர குடியுரிமை விசா இல்லாததால் வேலை மற்றும் தங்குவதற்கான வீடு போன்றவை கிடைப்பது இல்லை எனவும் வாய் வார்த்தையாக மட்டும் வாக்குறுதி அளிக்காமல் சட்டப்பூர்வமாக எழுதப்பட்ட நிரந்தர விசா குறித்த உத்தரவதை அவர்களுக்கு விரைவில் அளிக்கவேண்டும் எனவும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில் வழக்கறிஞரின் மனுவுக்கு பதிலளிக்கும் விதமாக பிரித்தானியாவின் உள்விவகாரத்துறை அலுவலகம் விசா குறித்த எச்சரிக்கை என்பது தேவையற்ற பயமுறுதல் என பதில் அளித்துள்ளது.