புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த மற்றொரு நாட்டுடன் பிரித்தானியா ஒப்பந்தம்
பிரித்தானியா, புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் பிரான்ஸ் முதலான சில நாடுகளுடன் ஒப்பந்தங்களைச் செய்துவருகிறது.
அவ்வகையில், புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்தும் வகையிலான ஒப்பந்தம் ஒன்றில் பிரித்தானியாவும் கிரீஸ் நாடும் கையெழுத்திட்டுள்ளன.
கிரீஸ் நாட்டுடன் ஒப்பந்தம்
பிரித்தானிய வெளியுறவு அமைச்சரான Yvette Cooperம் கிரீஸ் வெளியுறவுத்துறை அமைச்சரான George Gerapetritisம் கிரீஸ் நாட்டின் தலைநகரான ஏதென்ஸ் நகரில், அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்கள்.

அந்த ஒப்பந்தம், கடத்தல் கும்பல்களைக் கையாள உதவும் என்று கூறியுள்ள பிரித்தானிய வெளியுறவு அமைச்சரான Yvette Cooper, ஆங்கிலக்கால்வாயை கடக்க பயன்படுத்தப்படும் சிறுபடகுகள் விநியோகத்தை தடுக்க கிரீஸ் அதிகாரிகளுக்கு பிரித்தானியா உரிய பயிற்சியும் அளிக்கும் என்றும் கூறியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |