பிரித்தானியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் இணைந்து நடத்தும் உச்சி மாநாடு
பிரித்தானியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் தங்கள் இரண்டாவது இருதரப்பு உச்சிமாநாட்டை ஜூலை மாதம் 22ஆம் திகதி பிரஸ்ஸல்ஸில் நடத்த இருப்பதாக அறிவித்துள்ளன.
பிரித்தானியாவும் ஐரோப்பிய ஒன்றியமும்...
பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் , ஐரோப்பிய கவுன்சில் தலைவரான அன்டோனியோ கோஸ்டா மற்றும் ஐரோப்பிய ஆணையத் தலைவரான உர்சுலா வான் டெர் லேயன் ஆகியோர், எவியான்-லெஸ்-பெயின்ஸில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டின் இடையே சந்தித்துக்கொண்ட நிலையில், ஒரே நேரத்தில் சமூக ஊடகப் பதிவுகள் மூலம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

பிரித்தானிய பிரதமர் இல்ல செய்தித்தொடர்பாளர் கூறும்போது, இரு தரப்பினருக்கும் பயனளிக்கும் வகையில், பிரித்தானியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையிலான நெருங்கிய ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை தலைவர்கள் வலியுறுத்தினர் என்று கூறினார்.
மேலும், ஐரோப்பிய பாதுகாப்பு, மீள்திறன் மற்றும் செழிப்புக்கு ஒரு நெருங்கிய உறவு இன்றியமையாதது என்றும் அவர் கூறினார்.
விடயம் என்னவென்றால், பிரித்தானியாவும் பிரஸ்ஸல்ஸும் ஜூலை மாதம் 13ஆம் திகதி இந்த சந்திப்பை நடத்த விரும்பியிருந்தன.
ஆனால், ஒரு முதன்மை இளைஞர் அனுபவத் திட்டத்தின் கீழ், பிரிட்டிஷ் விண்ணப்பதாரர்களுக்கு விசா வழங்குவதற்கு எத்தனை ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் எதிர்ப்புத் தெரிவிக்கக்கூடும் என்பது குறித்த நிச்சயமற்ற தன்மையால், உச்சி மாநாட்டுக்கான தேதியை அறிவிப்பதை ஒத்திவைத்தன.
பிரித்தானிய மக்கள், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேற வாக்களித்து ஒரு தசாப்தத்திற்குப் பிறகு, பிரித்தானியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான மீளிணைப்பில் இந்த சந்திப்பு ஒரு முக்கியத் தருணமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |