புகலிடக்கோரிக்கையாளர்களை திருப்பி அனுப்பும் ஒப்பந்தம் நீட்டிப்பு
புகலிடக்கோரிக்கையாளர்களை திருப்பி அனுப்பும் வகையில் பிரான்சுக்கும் பிரித்தானியாவுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.
One in, one out ஒப்பந்தம்
கடந்த ஜூலையில், பிரித்தானியாவும் பிரான்சும் புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்தும் வகையில் One in, one out என அழைக்கப்படும் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டன.

இந்த One in, one out ஒப்பந்தம் என்பது என்னவென்றால், பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்குள் ஆங்கிலக்கால்வாய் வழியாக நுழைந்த ஒரு புகலிடக்கோரிக்கையாளர், தனக்கு பிரித்தானியாவில் குடும்பம் இருப்பதை நிரூபிக்க இயலாத பட்சத்தில், அவர் பிரான்சுக்கே திருப்பி அனுப்பப்படுவார்.
அப்படி பிரான்ஸ் ஏற்றுக்கொள்ளும் ஒவ்வொரு புகலிடக்கோரிக்கையாளருக்கும் பதிலாக, பிரித்தானியாவில் குடும்பம் உள்ளதை நிரூபிக்கக்கூடிய, பிரான்சிலிருந்து வரும் ஒரு புலம்பெயர்வோருக்கு பிரித்தானியா புகலிடம் அளிக்கும்.
ஒப்பந்தம் நீட்டிப்பு
அந்த One in, one out ஒப்பந்தம், இந்த ஆண்டு ஜூன் மாதம் 11ஆம் திகதியுடன் முடிவுக்கு வர உள்ளது.
இந்நிலையில், அந்த ஒப்பந்தத்தை அக்டோபர் மாதம் 1ஆம் திகதி வரை நீட்டிக்க இரு நாடுகளும் சம்மதித்துள்ளதாக பிரித்தானிய உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி நிலவரப்படி, One in, one out ஒப்பந்தத்தின் கீழ், பிரித்தானியாவிலிருந்து 606 புகலிடக்கோரிக்கையாளர்கள் பிரான்சுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்கள்.
அதற்கு பதிலாக, 581 புகலிடக்கோரிக்கையாளர்கள் பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்கு வந்துள்ளார்கள்.