பிரித்தானியா-ஜேர்மனி இடையே முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து
பிரித்தானியா மற்றும் ஜேர்மனி இடையே பாதுகாப்பு, முதலீடு மற்றும் வேலை வாய்ப்புகளை மேம்படுத்தும் முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது.
ஆர்டில்லரி தொழிற்சாலை மற்றும் வேலை வாய்ப்புகள்
இந்த ஒப்பந்தத்தின் கீழ், ஜேர்மனியின் Rheinmetall நிறுவனம் பிரித்தானியாவில் புதிய தொழிற்சாலையை அமைக்க உள்ளது.
இந்த தொழிற்சாலை பீரங்கிக் குண்டுகளுக்கான துப்பாக்கி குழாய்களை உற்பத்தி செய்யும், இது 400 பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும்.
Sheffield Forgemasters நிறுவனத்தின் பிரிட்டிஷ் ஸ்டீலை பயன்படுத்தி 2027 முதல் உற்பத்தி தொடங்கப்படும்.
கூட்டு ஆயுதங்கள் மற்றும் ராணுவ அபிவிருத்தி
இரு நாடுகளும் புதிய long-range missile-களை உருவாக்க இணைந்து பணிபுரிவதுடன், Typhoon போர்விமானங்களுடன் பறக்கக்கூடிய ட்ரோன்களையும் உருவாக்கவுள்ளன.
மேலும், ஜேர்மனியின் P8 கடற்பரப்பு கண்காணிப்பு விமானங்கள் RAF Lossiemouth (ஸ்காட்லாந்து) விமான நிலையத்திலிருந்து வட அட்டிலாந்திகில் சுற்றிவளைப்பு பணி மேற்கொள்ளும்.
நேட்டோவின் பாதுகாப்பை வலுப்படுத்தல்
ரஷ்யாவின் உக்ரைன் ஆக்ரமணத்தைத் தொடர்ந்து, இரு நாடுகளும் ஏற்கனவே பால்டிக் நாடுகளில் படைகளைக் கடத்தி, நேட்டோவின் பாதுகாப்பை வலுப்படுத்தியுள்ளன.
பாதுகாப்புக்கான புதிய ஆரம்பம்
இரு நாடுகளும் ஏற்கனவே Boxer எனும் armoured fighting vehicle சண்டை வாகனங்கள் மற்றும் Challenger 3 டாங்கிளை கூட்டாக தயாரித்து வருகின்றன.
ஜேர்மனியின் பாதுகாப்புத் துறை அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ், “ஐரோப்பா மற்றும் நேட்டோவின் பாதுகாப்பை வலுப்படுத்தும் முக்கிய முயற்சி இது” என்று தெரிவித்தார்.
இந்த ஒப்பந்தம் பிரிட்டன்-ஐரோப்பிய உறவுகளை புதிய கட்டத்திற்கு கொண்டு செல்கிறது, எனது பாதுகாப்பு செயலர் ஜான் ஹீலே கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
UK Germany Relationship, UK and Germany sign defence agreement