ஈரான் போர்... இரு நாடுகளுக்கிடையே உருவாகியுள்ள நெருக்கம்
ஈரான் போர், பிரித்தானியாவுக்கும் வட அயர்லாந்துக்குமிடையிலான நெருக்கத்தை சற்று அதிகப்படுத்தியுள்ளது தெரிகிறது.
அயர்லாந்தையும் பிரித்தானியாவையும் பிரிக்கும் ஒரு கோடு
உலக வரைபடத்தைப் பார்த்தால், ஒரு கோட்டுக்கு அந்தப் பக்கம் பிரித்தானியா, இந்தப் பக்கம் அயர்லாந்து இருப்பதைக் காணலாம்.
விடயம் என்னவென்றால், அயர்லாந்து ஐரோப்பிய ஒன்றிய நாடு, பிரெக்சிட்டுக்குப் பிறகு பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றிய நாடு இல்லை.

ஆக, 1920ஆம் ஆண்டு, மத வித்தியாசங்கள் காரணமாக பிரிந்த அயர்லாந்தும் பிரித்தானியாவும், பிரெக்சிட்டால் மேலும் விலகிப்போக நேர்ந்தது.
விளைவு, இருபக்கமும் வர்த்தகமும் பொருளாதாரமும் பாதிக்கப்பட்டன.
பிரித்தானியாவின் புதிய புலம்பெயர்தல் விதிகளால் பாதிப்புக்குள்ளாகியுள்ள இலங்கையர்கள் மற்றும் இந்தியர்கள்...
ஆனால், லேபர் கட்சி பிரித்தானியாவில் ஆட்சிக்கு வந்ததிலிருந்தே, பிரித்தானிய பிரதமரான கெய்ர் ஸ்டார்மர் பிரித்தானியாவின் நலன் கருதி சில நடவடிக்கைகளை எடுத்துவருகிறார்.

அவற்றில் ஒரு பகுதியாக, பிரித்தானியா, அயர்லாந்து உறவுகளை மேம்படுத்த அவர் முயற்சித்துவருகிறார்.
டந்த ஆண்டு Cheshireஇல் நடைபெற்ற வருடாந்திர உச்சி மாநாட்டில் பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மரும், அயர்லாந்து பிரதமர் மைக்கேல் மார்ட்டினும் கலந்துகொண்ட நிலையில், மாநாட்டில் பேசிய ஸ்டார்மர், அந்த உச்சி மாநாடு, ஒரு புதிய யுகத்தின் துவக்கத்தை அடையாளப்படுத்துகிறது என்று கூறியிருந்தார்.
ஆக, இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று ஒத்துழைத்து நட்பு பாராட்டுமானால், மீண்டும் நல்லுறவு தழைத்து, இரு தரப்பிலும் அதனால் பொருளாதாரம் மேம்பட வாய்ப்புள்ளது, ஸ்டார்மரின் முயற்சியால், அயர்லாந்தும் ஒத்துழைக்குமானால், அது சாத்தியமானால், இரு தரப்புக்கும் பெரும் நன்மைகள் காத்திருக்கின்றன என்பதில் சந்தேகமில்லை என அப்போதே குறிப்பிட்டிருந்தோம்.
போரால் உருவாகியுள்ள நெருக்கம்
இந்நிலையில், இந்த ஆண்டுக்கான அயர்லாந்து, பிரித்தானிய உச்சி மாநாட்டில் பேசிய பிரித்தானிய பிரதமர் ஸ்டார்மர், மத்திய கிழக்கில் உருவாகியுள்ள பிரச்சினை, பிரித்தானியாவுக்கும் அயர்லாந்துக்கும் இடையிலான நல்லுறவின் முக்கியத்துவத்தின் அவசியத்தை அதிகரித்துள்ளது என்று கூறியுள்ளார்.

மாநாட்டின்போது, பிரித்தானிய பிரதமர் ஸ்டார்மரும், அயர்லாந்து பிரதமரான மைக்கேல் மார்ட்டினும், இரு நாடுகளுக்கும் இடையில் பாதுகாப்பு தொடர்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொள்ள சம்மதம் தெரிவித்துள்ளனர்.
மாநாட்டைத் தொடர்ந்து நேற்று வெள்ளிக்கிழமை பிரித்தானிய பிரதமர் ஸ்டார்மரும், அயர்லாந்து பிரதமரான மைக்கேல் மார்ட்டினும் இணைந்து வெளியிட்ட அறிக்கை ஒன்றில், எரிசக்தி பாதுகாப்பு, விலைகளைக் குறைக்க முயற்சித்தல் மற்றும் புதுப்பிக்கப்பட்ட பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகியவை குறித்த இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, தற்போதைய நிலையற்ற தன்மையைக் கருத்தில் கொள்ளும்போது, அதாவது, போர்ச்சூழலில் மத்தியில், மிகவும் முக்கியமானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |