பிரித்தானியாவின் புதிய mini oragans திட்டம் - 22 மில்லியன் பவுண்ட் ஒதுக்கீடு
UK announced mini oragans project: மனித உடல் உறுப்புகளைப் போல சிறிய திசுக்களை உருவாக்க பிரித்தானியாவில் புதிய திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
22 மில்லியன் பவுண்ட் ஒதுக்கீடு
பிரித்தானிய அரசு, அறிவியல் ஆராய்ச்சிகளில் விலங்குகளைப் பயன்படுத்தும் பரிசோதனைகளை குறைக்கும் நோக்கில் 22 மில்லியன் பவுண்டு மதிப்பிலான புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.
இந்த திட்டத்தின் முக்கிய அம்சம், மனித உடல் உறுப்புகளைப் போல சிறிய திசுக்களை (Mini Organs) உருவாக்கி, மருந்து பரிசோதனைகளில் பயன்படுத்துவதாகும்.

20 மில்லியன்
இந்த முதலீட்டில் 20 மில்லியன் பவுண்டு, கேம்பிரிட்ஜில் அமைக்கப்படும் Pre-clinical Translational Models Hub-க்கு செலவிடப்படுகிறது.
NHS நோயாளிகளிடமிருந்து பெறப்படும் செல்களைக் கொண்டு மனித திசுக்கள் உருவாக்கப்பட்டு, ஆராய்ச்சியாளர்களுக்கு பகிரப்படும்.
இதன் மூலம், புற்றுநோய், குடல் நோய், மூளை நோய் போன்றவற்றுக்கான புதிய சிகிச்சைகள் விரைவாக பரிசோதிக்கப்படலாம்.
2 மில்லியன்
மேலும் 2 மில்லியன் பவுண்டு மதிப்பில் ஒன்பது உயர் தொழில்நுட்ப திட்டங்கள் தொடங்கப்படுகின்றன. இதில் பாத்திரத்தில் இதய செல்களை துடிக்க விடுதல், ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட மனித காது மாதிரிகள், மற்றும் மருந்துகள் உடலில் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை கணிக்கக்கூடிய AI systems ஆகியவை அடங்கும்.
2025-ஆம் ஆண்டில் பிரித்தானியாவில் 2.54 மில்லியன் விலங்கு பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன. இது 2024-இன் ஒப்பீட்டில் 3.8 சதவீதம் குறைவாகும். புதிய திட்டம் இந்த எண்ணிக்கையை மேலும் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அறிவியல் அமைச்சர் Chris McDonald கூறியதாவது: “இந்த முதலீடு உலகின் முன்னணி ஆராய்ச்சியாளர்களுக்கு வலுவூட்டும். புற்றுநோய் போன்ற கடுமையான நோய்களுக்கு சிறந்த சிகிச்சைகளை உருவாக்க உதவும். அதேசமயம், விலங்கு பரிசோதனைகளை குறைக்கும்.”
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் Matthias Zilbauer தெரிவித்ததாவது: “மனித செல்களிலிருந்து உருவாக்கப்படும் இந்த Mini Organs, நோயாளியின் தனிப்பட்ட உயிரியல் அம்சங்களை பிரதிபலிக்கின்றன. இதனால், நோய்களைச் சரியாகப் புரிந்துகொண்டு, தனிப்பட்ட சிகிச்சைகளை உருவாக்க முடியும்.”
ஆனால், ஆராய்ச்சியாளர்கள் விலங்கு பரிசோதனைகள் முற்றிலும் நிறுத்தப்படாது எனவும், சில துறைகளில் அவை இன்னும் அவசியம் எனவும் தெரிவித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |