பிரித்தானியாவில் புகையிலை விற்பனைக்கு தடை: புதிய மசோதாவுக்கு ஒப்புதல்
பிரித்தானியாவில் புகையிலை பழக்கத்தை ஒழிக்கும் முயற்சியாக புதிய சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
புகையிலை மற்றும் வேப்ஸ் மசோதா
பிரித்தானியாவில் புகையிலை பழக்கத்தை ஒழிக்கும் முயற்சியாக அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் புகையிலை மற்றும் வேப்ஸ் மசோதா(Tobacco and Vapes Bill) ஒப்புதல் பெற்றுள்ளது.
நிறைய விவாதங்கள் மற்றும் பல்வேறு திருத்தங்களுக்கு பிறகு செவ்வாய்க்கிழமை நடந்த கூட்டத்தின் போது பிரபுக்கள் சபையில்(House of Lords) இந்த புதிய மசோதாவானது ஒப்புதல் பெற்றுள்ளது.

அடுத்த வாரத்தில் இந்த சட்டமானது அரச அங்கீகாரம்(Royal Assent)கிடைத்தவுடன் இந்த மசோதா புதிய சட்டமாக நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புகையிலை பயன்பாட்டிற்கு வயதுக் கட்டுப்பாடு
நடைமுறைக்கு வரும் புதிய சட்டத்தின்படி, 2008ம் ஆண்டு பிறகு பிறந்த எவரும் இனி பிரித்தானியாவில் சட்டப்பூர்வமாக புகையிலை வாங்க முடியாது என்பதே இதன் தனிச்சிறப்பு ஆகும்.
மேலும் இந்த சட்டமானது சுழலும் வயது வரம்பு கொண்டுள்ளது. அதாவது 2009 ஜனவரி 1 அல்லது அதற்கு பிறகு பிறந்தவர்களை இலக்காக கொண்டு புகையிலை வாங்குபவர்களின் வயது ஒவ்வொரு ஆண்டும் ஓராண்டு உயர்த்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சட்டத்தின் முக்கிய நோக்கமானது, இளைஞர்களை புகையிலை பழக்கத்தில் இருந்து ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்துவது ஆகும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |