பிரித்தானியாவில் 5 முதல் 11 வயது குழந்தைகளுக்கு தடுப்பூசி போட முடிவு! வெளியான முக்கிய தகவல்
பிரித்தானியாவில் ஐந்து முதல் 11 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகில் பல்வேறு நாடுகளில் கொரோனாவிற்கான தடுப்பூசி போடப்பட்டாலும், குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.
இருப்பினும், 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளும், 15 முதல் 19 வயது வரை உள்ளவர்களும் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதால், குழந்தைகளுக்கான தடுப்பூசி போடும் பணிகளை விரைந்து செயல்படுத்த வேண்டும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
அதன் படி பிரபல ஐரோப்பிய நாடான ஸ்பெயின் கடந்த 15-ஆம் திகதி முதல் 5 முதல் 11 வயது கொண்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படும் என அறிவித்தது.
இதைத் தொடர்ந்து இன்னும் சில நாடுகள் தடுப்பூசி போடுவது குறித்து ஆலோசித்து வருகிறது. இந்நிலையில், ஐந்து முதல் 11 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு Pfizer-BioNTech நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை பிரித்தானியா அங்கீகரித்துள்ளது.
இதற்கு பிரித்தானியாவின் Medicines and Healthcare products Regulatory Agency (MHRA), இன்று(22.012.2021) ஒப்புதல் வழங்கியதை அடுத்து, இந்த தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனாவால் ஆபத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்க வேண்டும் என்று பிரித்தானியாவின் தடுப்பூசி குழு அறிவுறுத்தியிருந்தது.
இந்நிலையில், குழந்தைகளுக்கு போடப்படும் முதல் மற்றும் இரண்டாவது தடுப்பூடிக்கு இடையே 8 வார இடைவெளி கொடுக்கபடும் எனவும், தடுப்பூசி இரண்டுமே 10-microgram அளவிற்கே செலுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.